மாகந்துரே மதூஸுடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 6 பேர் இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் மதூஸின் நெருங்கிய உறவினர் ஒருவரும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று வருகை தந்த 6 பேரும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு,
எம். எஸ்.எம். பதுார்தீன்
எம். கே. புத்திம பெரேரா
எம்.எச்.எம். ஜபீர்
எஸ்.வீ. ரணசிங்க
ஆர்.எஸ். ஹேவகே
என்.ஆர். சமரசிங்க
இவர்களில் என்.ஆர். சமரசிங்க என்பரே மாகந்துரே மதூசின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது.

