இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், அந்த மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.
இந்த நிலையில் லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய மதுபான விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்ளிலும் வைரலாக பரவியுள்ளது.
பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தருமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.