Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு- கிரான் பகுதியில் மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

September 30, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளினால் மாதுறுஓயா கிளை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுக்க கோரி நேற்று செவ்வாய்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

புணாணை கிடச்சிமடு விவசாய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டம் கிடச்சிமடு விவசாய கண்டத்தில் இருந்து ஆரம்பமாகி ரிதிதென்னை சந்திவரை சென்றடைந்தது.

இதன்போது மண் அகழ்வின் மூலம் விவசாயத்தினை அழிக்காதே, மண் அகழ்வின் மூலம் புணாணை மேற்கில் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட நெற்காணிகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது யார், வனபரிபாலன புவிச்சரிதவியல் திணைக்களமே புணாணை மேற்கில் மண் அகழ்விற்கு அனுமதி வழங்காதே, தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அழிக்காதீர், மண் அகழ்வால் இன்றோடு வன வளம் இல்லை என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கிரான் பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட புணாணை மேற்கில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதால் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட நெற்காணிகள் மற்றும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. அத்தோடு மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நண்பர்கள் போன்று பழகுவதால் இவர்களின் உதவியுடன் மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.

இதன் காரணமாக வாய்க்கால் ஆழமான நிலைமைக்கு தள்ளப்பட்டு காணப்படுவதால் விவசாய நிலம் பள்ளமாக காணப்படுகின்றது. இதனால் விவசாய செய்கைக்கு நீர் பாய்ச்சுவது பாரிய பிரச்சனையாக காணப்படுவதுடன், மணல் அகழ்வில் ஈடுபடுவதால் விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் சிதைவடைந்து காணப்படுகின்றது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மண் அகழ்வு விடயத்தில் உரிய அதிகாரிகள் கரிசனை காட்ட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச செயலக உத்தியோகத்தர், கிராம சேவை அதிகாரி ஆகியோருக்கு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் கருத்து தெரிவிக்கையில் – தங்கள் பிரதேச எல்லைக்குட்பட்ட வீதிகளை மணல் அகிழ்வில் ஈடுபடுவோர் சேதப்படுத்தியுள்ளனர், அத்தோடு பிரதேச சபைக்கு ஒரு கியூப் மணலுக்கு பணம் செலுத்த வேண்டும் ஆனால் செலுத்துவதில்லை. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தமைக்கமைய போராட்டம் கழைந்து செல்லப்பட்டது.

குறித்த ஆர்பப்hட்டத்தில் புணாணை மேற்கு கண்ட விவசாயிகள் மற்றும் புணாணை பன்சமஹ விகாரை விகாராதிபதி எல்லேவேவெ பீதாலங்கார ஸ்தவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

Next Post

சிம் அட்டைகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

Next Post

சிம் அட்டைகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

July 21, 2026
தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures