Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் :நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

January 5, 2018
in News, Politics
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது போலி விமர்சனங்களை வைத்தாலும், பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பல தடவைகள் மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல், 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தல், 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைத்தேர்தல்,

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தமை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் இவ்வாறு பல தேர்தல்களில் எமது கோரிக்கைகளை ஏற்று பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அரசியல் தீர்வை அடைந்துவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு எங்களுக்கு வாக்களித்திருக்கின்றனர்.

எங்கள் மீது மக்கள் விமர்சனங்களை வைத்தாலும் பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எம்மை பற்றி தெரியும். 2015ஆம் ஆண்டு ஆவணி மாதம் வரைக்கும் உள்ளூராட்சிமன்ற சபைகள் இயங்கிக் கொண்டே இருந்தன.

அப்போது மகிந்த ஆட்சிக்காலம் ஜனவரி மாதம் முடிந்தாலும், மகிந்த ஆட்சிக்காலத்தில் அவர்களது அடி வருடிகளாக இருந்தவர்கள் காட்டு சட்டங்களை கையில் வைந்திருந்தவர்கள்.

இப்போதும் கூட அவர்களது செல்வாக்குகள் சில அதிகாரிகளிடம் இருக்கின்றன. இந்தத்தேர்தல் முடிந்த கையோடு எங்களிடம் பாரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுகின்றன.

வீதி அபிவிருத்திக்குச் சொந்தமான வீதிகள், கமநலசேவை நிலையத்திற்குச் சொந்தமான வீதிகள், விவசாய திணைக்களத்திற்குச் சொந்தமான வீதிகள், இவற்றையெல்லாம் விட உள்ளூராட்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான 2000 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளை புனரமைப்பதை விட அவற்றை சீர் செய்வதற்கு 2000 ஆயிரம் மில்லியனுக்கு மேலான நிதி தேவை. கிளிநொச்சி இன்று வரை நகர அமைப்பை கொண்டிருக்கவில்லை.

கடந்தகாலங்களில் காட்டாட்சி நடத்தியவர்கள், இதற்கு தடையாக இருந்திருக்கின்றார்கள். அதாவது நகரத்திட்டமிடலுக்கு அமைவாக கட்டுமானங்களை அமைக்காது நினைத்தபாட்டில் அவற்றை அமைத்திருக்கின்றார்கள்.

இப்போது பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு பெயர் பலகைகளோ அல்லது படங்களோ, விளம்பரங்களோ செய்து அவற்றை நாங்கள் முன்னெடுக்கவில்லை.

மக்களுக்காக செய்யவேண்டிய அபிவிருத்திகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை சரியாக முன்னெடுத்து வரும் அதேவேளை தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை நோக்கியும் நாங்கள் பயணிக்க வேண்டியிருக்கின்றது.

வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலானது எங்களது உரிமைக்கான ஒரு தேர்தலாக பார்க்கப்படுகின்ற அதேநேரம் மக்கள் பிரதிநிதிகளுடன் கூடிய ஒரு அபிவிருத்திக்கான களமாகவும் அமைகின்றது.

மக்கள் இந்த தேர்தலிலும் தங்கள் ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோரிடத்திலும் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தென்னாப்பிரிக்காவில் ரயில் கவிழ்ந்து 14 பேர் பலி

Next Post

வடகொரிய அதிபருக்கு மனநலம் பாதிப்பா?: வெள்ளை மாளிகை கேள்வி

Next Post
வடகொரிய அதிபருக்கு மனநலம் பாதிப்பா?: வெள்ளை மாளிகை கேள்வி

வடகொரிய அதிபருக்கு மனநலம் பாதிப்பா?: வெள்ளை மாளிகை கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures