Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகோற்சவத்தில் கலந்துகொண்ட பலர் கட்டாயத் தனிமைப்படுத்தல்

December 29, 2020
in News, Politics, World
0

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலய திருவிழாவில் பங்குபற்றிய பலர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஆலயத்தில் பூஜைகள் நடைபெறுவதற்குத் தடை விதிக்கப்படவில்லை. பக்தர்கள் ஆலயத்தினுள் செல்லாமல் வெளியே, ஆலய வளாகத்தில் நின்று இறை வழிபாட்டில் ஈடுபட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்துக்கு வருகை தந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின்போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலுக்கு அமைய சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொ.யசிதரனின் வழிப்படுத்தலில் பொன்னாலை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ச.சர்மிலன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனாத் தடுப்பு செயலணியால், ஆலயத் திருவிழாக்களின்போது 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்கு வருகைதந்த பக்தர்களின் பெயர்கள் நுழைவாயிலில் வைத்து பதிவுசெய்யப்பட்டு 50 பேர் மட்டும் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பக்தர்களுக்கு தொற்று நீக்கல் திரவம் வழங்கப்பட்டது. முகக்கவசம் இல்லாதவர்களுக்கு ஆலய பரிபாலன சபை அவற்றை வழங்கியிருந்தது. ஆலய வளாகத்திலும் முகப்பிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பனர்கள் கட்டப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்தன.

எனினும், திருவடிநிலை புனித தீர்தக்கரையில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தின்போது ஆலயத்திற்கு வருகை தராமலேயே வேறு மார்க்கங்களால் பக்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.

ஏற்கனவே கடலுக்குச் சென்று நீராடிக்கொண்டிருந்த பலர் சுவாமி தீர்த்தமாடச் சென்றபோது திடீரென சுவாமிக்கு அண்மையில் சென்று சுற்றிவர நின்று வழிபட்டனர்.  அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இதனால், ஆலய மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை மற்றும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை எனக் கொரோனா தடுப்பு செயலணிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர் எனத் தெரியவருகின்றது. இதைத் தொடர்ந்தே தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன் அவர்களின் நடவடிக்கைகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

நாட்டின் பல பகுதிகளில் பல தடவைகள் மழை

Next Post

திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி 37ஆயிரத்தை தாண்டியது!

Next Post

திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி 37ஆயிரத்தை தாண்டியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026

Recent News

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures