Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகாவலி அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய ரவிகரன் எம்.பி

October 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

முல்லைத்தீவு – கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார்காணிகளிலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசகாணிகளிலும் அத்துமீறி சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கப்படுகின்ற விவகாரத்தில், மகாவலி அதிகாரசபைக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திடமும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திடமும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசேயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையினையும் அழைத்துக் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பளச் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்டசெயலாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்த்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள 44.197ஏக்கர் காணிகள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட அரசகாணிகளையும், பெருமளவான தமிழ்மக்களின் தனியார்காணிகளையும் அத்துமீறி ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள, குறித்த சட்டவிரோத உப்பளம் அகற்றப்படவேண்டுமென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

ஆனால் மகாவலி அதிகாரசபை உப்பளம் அமைக்கப்பட்டுள்ள பகுதி வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியெனவும், தமக்குரித்தான பகுதியெனவும் தெரிவித்துவந்தனர்.

இத்தகைய சூழலில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தால் நிலஅளவைத் திணைக்களத்தின் ஊடாக அந்தப் பகுதிக்குரிய சுவட்டு வரைபடம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் நிலஅளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்தின் பிரகாரம் குறித்த உப்பளம் அமைக்கப்படும் பகுதி கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் மத்தி கிராமஅலுவலர் பிரிவிற்குட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் உப்பளத்திற்கென மொத்தம் 44.197ஏக்கர் காணி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதும் இனங்காணப்பட்டுள்ளது.

அதில் 13ஏக்கர் 02ரூட் காணிகள் அரச காணிகள் எனவும், மிகுதி 31ஏக்கர் தனியார் காணிகளாகவும் இனங்காணப்பட்டுள்ளன.

அத்தோடு எமது மக்களிடமிருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் பெறப்பட்ட தனியார் ஆவணம் ஒன்று, நில அளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்துடன் தொடர்புடையதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஆவணரீதியாக அந்தப் பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குரியதெனவும், பெரும்பகுதி தமிழ் மக்களுக்குரிய தனியார் காணிகள் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட பிற்பாடும் அங்கு சட்டவிரோத உப்பளச் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்தோடு குறித்த பகுதியானது கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியென ஆவணரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதியென மகாவலி அதிகாரசபைக்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் அறிவித்தல் வழங்கிய நிலையில், அந்த வரைபடங்களைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளது.

மகாவலி அதிகாரசபை தொடர்ந்தும் இவ்வாறு திருட்டுவேலைகளில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

மகாவலி அதிகாரசபை தொஞர்ந்தும் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலகமோ அல்லது முல்லைத்தீவு மாவட்ட செயலகமோ சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டசெயலக காணிப்பிரிவு இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் திரட்டி வைத்திருப்பதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்டசெயலாளர், இதுவிடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேசசேயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையினையும் அழைத்துக் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பளச் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை – நீதிமன்றம் அதிரடி

Next Post

நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ; ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

Next Post
நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ; ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ; ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

பத்தா – திரைப்பட விமர்சனம்

October 2, 2026
ஆசிய விளையாட்டு விழா  அணிக்கு   எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்

ஆசிய விளையாட்டு விழா  அணிக்கு   எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்

October 2, 2026
நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ; ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ; ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

October 2, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

மகாவலி அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய ரவிகரன் எம்.பி

October 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures