தடைகள் எவ்வடிவத்தில் தொடர்ந்தாலும் தடைகளை உடைத்து நாங்கள் சாதனை படைப்போம் என பாடசாலை மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் இன்று (22) 75 ஆவது ஆண்டு நிறைவு பவளவிழா நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை மாணவி ஒருவர் சிறப்புரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுனாமிப் பேரலையின் தாக்கமும் போர்தந்த வலிகளும் எம்மில் அழியாத வடுக்களாக இருந்தாலும் நாம் எழுந்து வீறு நடை போடும் மகளிராக மாறுவோம் என கூறியுள்ளார்.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
எனும் பாரதியின் கூற்றுக்கு உருக்கொடுத்து சாதனைபடைக்கும் சரித்திரராக நாம் மிளிர்ந்து எழுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை 75ஆவது ஆண்டு நிறைவு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.