ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் தினமும் இரவு அழுகுரலும், அலறல் சத்தமும் கேட்பதாக அங்கு வசிக்கும் ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்கள்.
ஜெயலலிதா இறந்து 5 மாதங்களை கடந்து விட்ட பிறகும் அவர் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகவில்லை.
இதனுடன் சேர்த்து சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து, கொடநாடு பங்களாவில் கொள்ளை, கொள்ளையடித்தவர்களின் மர்ம மரணங்கள் என மர்மங்கள் தொடருகின்றன.
இதனிடையில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டிலும் மர்மங்கள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள போயஸ் கார்டன் ஊழியர்கள், தினமும் இரவு வேளையில் ஒரு பெண்ணின் அலறல் சத்தமும், அழுகுரல் சத்தமும் கேட்கிறது.
இதற்கு பயந்தே தினகரன் குடும்பத்தார் அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். அந்த சத்தம் காரணமாக தங்கள் இரவுகள் அச்சத்தோடு கழிவதாக கூறியுள்ளனர்.
மேலும் சசிகலாவின் கைதுக்கு பிறகே இந்த பிரச்சனை அங்கு உள்ளதாம்.