போயஸ் கார்டனை தொடர்ந்து சசிகலா கைப்பற்ற போகும் இடம் எது தெரியுமா?
அதிமுக கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நாளை தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிட்ட சசிகலா, ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டனை கைப்பற்றியுள்ளார்.
அடுத்து எம்.ஜி.ஆரின் குடும்பத்தாரையும், அவர் ஆதரவாளர்களையும் தன்வசப்படுத்த நாளை ராமாவரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அவரது உருவ சிலையை சசிகலா திறந்து வைக்கவுள்ளார்.
சசிகலா அதிமுகவின் தலைமை இடத்தை கைப்பற்றியது எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, அவரது தம்பி தீபன் ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.
இவர்கள் எல்லோரையும் சமாதானப்படுத்த ராமவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை புதுப்பித்து, சசிகலா திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் போயஸ் கார்டனை கைப்பற்றிய மன்னார்குடி கோஷ்டி, எம்.ஜி.ஆர் கார்டனை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.