வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இலங்கை தொழில்நுட்ப சேவையைச் சேர்ந்த தொழில்நுட்ப அலுவலர் மற்றும் பயிற்சி தரத்தினரை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர் பொதுச் சேவைகள் ஆணைக்குழு வட மாகாணம் நல்லூர் யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளர் சீ.ஏ.மோகன்ராஜ் அறிவித்துள்ளார்.
இதேவேளை திணைக்கள அலுவலகங்களில் பணியாற்றுவோரில் தொழில்நுட்ப அலுவலர் மற்றும் பயிற்சி தரத்தில் இணைந்து கொண்ட விரும்புவோரிடமிருந்தும் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பெற்று அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.