Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுஜன பெரமுனவிலிருந்து விலகினார் மேஜர் அஜித் பிரசன்ன!

July 29, 2018
in News, Politics, World
0
பொதுஜன பெரமுனவிலிருந்து விலகினார் மேஜர் அஜித் பிரசன்ன!

பொதுஜன பெரமுனவிலிருந்து தாம் விலகியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன, தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெஸில் ராஜபக்ஸ இரண்டு தடவைகள் பெற்தரைக்கு வந்ததான குறிப்பிட்டுள்ள முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர், மேஜர் அஜித் பிரசன்ன, அதற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும்,பெந்தவர பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவின்போதும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தான் முயற்சி செய்தபோது, இந்த விடயம் தொடர்பில் பேச வேண்டாம் என பெஸில் ராஜபக்ஸ கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதனால் நாம் அதிகளவில் முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலுக்கு தகுதியானவர் எனவும், அவரை வெற்றி பெறச் செய்வதற்கு பகிரங்கமாக பேசியமையாலும் பெசில் ராஜபக்ஸ இவ்வாறு நினைத்திருக்கலாம் எனக் கூறியுள்ள மேஜர் பிரசன்ன, பெசில் ராஜபக்ஸவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்குப் பதிலாக வேறொருவரை இறக்கும் செயற்பாடு கட்சிக்குள் இடம்பெறுவது, தெரிவதாகவும், அது திட்டமிட்ட செயற்பாடாகும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ தகுதியற்றவர் என குமார வெல்கம, தினேஷ் குணவர்தன, விமலவீர திசாநாயக்க ஆகியோர் பகிரங்கமாக கூறியுள்ளமையை நினைவு கூர்ந்துள்ள அவர், கோத்தாபய குறித்து தான் தெரிவித்த கருத்துக்களை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்து எனக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் கூறியது தவறு எனவும் அவ்வாறு பேச வேண்டாம் எனவும் சிலர் கூறியதாகவும், அதனால், பகிரமங்கமாக ஊடக சந்திப்பொன்றை நடத்த வேண்டியேற்பட்டது எனவும் மேஜர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜீ.எல். பீரிஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும் பெஸில் ராஜபக்ஸவே கட்சியை முன்னெடுப்பதாகவும், அதனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும், அந்தக் கட்சியுடன் தனக்கு எவ்வித தொடர்புமில்லை எனவும், தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கயிறு கொடுத்தலில் சூரர்கள் தெற்கின் அரசியல்வாதிகள்! – சி.வி

Next Post

கலிபோர்னியா காட்டு தீயில் சிக்கி 2 பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி

Next Post

கலிபோர்னியா காட்டு தீயில் சிக்கி 2 பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures