Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு!

July 22, 2020
in News, Politics, World
0

கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு உள்ள அடிப்படை உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் கடிதமொன்றினைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வேண்டுகோளுக்கமைய கடந்த அரசாங்கமே இவ்வாறு செய்துள்ளது. பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், தற்கொலை குண்டுதாரிகள் போன்றோர் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தமது அடிப்படைவாத அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அவ்வாறானவர்களுக்கு தற்கொலை குண்டுதாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி சமூக வலைத்தளங்களின் ஊடாக பேச முடியும். ஆனால் அதன் காரணமாக ஏற்படப்போகும் பாதிப்புக்களைக் கூறுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இல்லை. நாட்டின் பிரதான ஊடகங்களிலும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களிலும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவ்வாறெனில் எனது உரிமை எங்கே ?

கொடி சின்னத்தில் நாம் ஒரு கட்சியை உருவாக்கியிருக்கின்றோம். இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றோம். அரசியல் நிலைப்பாடுகளை கூறுவதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுகிறது. ஆனால் இது போன்ற செயற்பாடுகளால் எமது நிலைப்பாடுகளை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது? எனவே தான் தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதான அதிகாரியொருவருக்கும் கடிதமொன்றினைக் கையளித்துள்ளோம்.

எமது கருத்துக்களை கூறவோ காணொளிகளை பகிரவோ முடியாமலுள்ளது. என்னுடைய பெயர் அல்லது புகைப்படம் போடப்பட்டால் கூட அந்த கணக்குகளும் முடக்கப்படுகின்றன. இது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளாகும். எனது உரிமையையே நான் கோருகின்றேன். இது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

Previous Post

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!

Next Post

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள்!

Next Post

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures