Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா? ஜீவன் கேள்வி

November 9, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா? ஜீவன் கேள்வி

எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது? பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா  அல்லது அதிகரிக்கப்படாதா, இதுவே என் கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம்  கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய  ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உங்களுக்கும், (பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வியை நோக்கி) விடயங்களை தெரியாமல் மேசையை தட்டும் உங்களின் நண்பர்களுக்கும் ஒரு  விடயத்தை குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன். அமைச்சர் வசந்த சமரசிங்க தொழிசங்க சந்திப்பின் போது எம்முடன் கலந்துக்  கொண்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தில் முடிந்தால் 10 ரூபாவையேனும் அதிகரிக்கமுடியுமா என்று ஜனாதிபதியிடம் தெளிவாக குறிப்பிட்டேன்.

ஜனாதிபதி தனது உரையில் பெருந்தோட்ட மக்களுக்கு 1750 ரூபாய் வழங்கப்படும், 200 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்படும் அதற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 25 நாட்களுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் ' என்று குறிப்பிட்டிருந்தார்.

எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது. தோட்ட கம்பனியே அதனை தீர்மானிக்க வேண்டும். தொழில் வழங்கல் நாட்கள் மாற்றமடையலாம்.

பெருந்தோட்ட கம்பனிகள் 200 ரூபா வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெருந்தோட்ட கம்பனிகளின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை ' ஒரு ரூபாய் கூட அதிகரிக்க போவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதாயின் அதற்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவேன்.

வீர வசனம் பேசலாம் ஆனால் நடைமுறையில் அவற்றை செயற்படுத்த முடியாது. பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா  அல்லது அதிகரிக்கப்படாதா, இதுவே என் கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள் என்றார்.

—

Previous Post

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

Next Post

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது “FOOTPRINT” ஆவணப்படம்

Next Post
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது “FOOTPRINT” ஆவணப்படம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது “FOOTPRINT” ஆவணப்படம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures