Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண் உத்தியோகத்தா்களை கட்டிப் பிடிக்குமாறு வற்புறுத்திய வலயக் கல்வி பணிப்பாளா்

April 11, 2019
in News, Politics, World
0

யாழ்.தீவக வலயக் கல்வி பணிப்பாளா் தனக்கு முன்னால் இரு பெண் உத்தியோகத்தா்களை கட்டிப் பிடிக்குமாறு கூறி வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணைகளில் தொியவந்துள்ளது.

இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளது.இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அண்மையில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதில் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக விசாரணைக்குழுவிடம் விபரமாக எடுத்துரைத்து வருவதோடு, தொடர்ந்தும் தாம் அங்கு கடமைபுரிய மறுத்து வருகின்றனர்.

அதற்கான காரணங்களை ஆவணங்களுடன் சமர்ப்பித்துள்ளனர்.அந்தவகையில் பெண் உத்தியோகத்தர்கள் இருவரை தமது அலுவலகத்திற்கு அழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் “நீங்கள் இருவரும்

எனக்கு முன்னால் கட்டிப்பிடியுங்கள்” என வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த உத்தியோகத்தர்கள் தொடர் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவரவுள்ளதோடு, நடைபெறும் விசாரணை அதற்கான தீர்வாக அமையாவிட்டால் பாரதுரமான விளைவுகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சே சந்திக்க நேரிடும்

என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. நடைபெறும் விசாரணைகள் மிகவும் நேர்த்தியாகவும்,

பொறுமையாகவும் நடைபெறும் என்பதில் சங்கம் அதீத நம்பிக்கைகொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழ். பல்கலை இந்து நாகரிகத்துறை இந்து கற்கைகள் பீடமாக தரமுயர்வு

Next Post

118 அம்புலன்ஸ் வண்டிகள் சேவையில் இணைப்பு

Next Post

118 அம்புலன்ஸ் வண்டிகள் சேவையில் இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures