பெண்கள் பேரணிக்கு ஆதரவாக குயின்ஸ்பார்க்கில் திரளும் மக்கள் அலை.
வாசிங்டன் டி.சியில் இடம்பெறும் பெண்கள் பேரிணிக்கு ஆதரவு நல்கும் பொருட்டு ரொறொன்ரோ குயின்ஸ்பார்க்கில் ஏராளமான மக்கள் அலை திரளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெண்களின் உரிமைகள் குறித்த செய்தியை டிரம்பின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் பொருட்டு கனடா பூராகவும் மட்டுமன்றி உலகம் பூராகவுமே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ரொறொன்ரோ டவுன்ரவுனில் இடம்பெறும் நிகழ்வில் 10,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளலாம் என பேரணி அமைப்பாளர்களில் ஒருவரான Kavita Dogra தெரிவித்துள்ளார்.
அங்கு என்ன நடக்கின்றதென எமக்கு தெரியும். கனடாவிலும் அவ்வாறு நடப்பதை நாம் விரும்ப வில்லை எனவும் கூறியுள்ளார.
இந்நிகழ்வு காரணமாக டவுன்ரவுன் மையம் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற நிகழ்வுகள் கிட்டத்தட்ட 30 கனடிய நகரங்கள், ஒட்டாவா, மொன்றியல், மற்றும் வன்கூவர் ஆகிய இடங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
.