Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட ஆதாரங்கள்

February 21, 2017
in News
0
பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட ஆதாரங்கள்

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட ஆதாரங்கள்

பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது.

விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜோன்னஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு குற்றவாளிகளாக இராணுவ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கோருமாறு கேட்டுள்ளது.

இந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை ஐ.நா குழு ஊடாக வழங்கியுள்ளோம். நீதியை நிலைநாட்டும் கடும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றதா என்பதை பார்ப்போம்.

அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எமது அறிக்கையில் கூறியுள்ளோம். ஐ.நா குழு அதன் முன்னேற்றங்களை கண்காணிக்க முடியும் என சூகா கூறியுள்ளார்.

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரிகளில் மேஜர் ஒருவரும் லெப்டினட் ஒருவரும் அடங்குகிறார்.

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இலங்கையின் மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அவர்களிடம் சிக்கிய பெண்களின் சத்தியக் கடிதங்களின் பெயர்கள் ஐ.நா குழுவிடம் வழங்கப்பட்டுள்ள விபரமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

இந்த அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா அமைதிக்காக்கும் படையில் சேவையாற்றியுள்ளார். நான்காவது அதிகாரி சித்திரவதை கொடுப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். 5வது அதிகாரி இந்த குற்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்த அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்தாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு முகாம்கள் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

முகாம்கள் இயங்கியதாக கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

வவுனியாவுக்கு அருகில் ஒரு முகாம், புத்தளத்திற்கு அருகில் ஒரு முகாம். கொழும்பில் ஒரு முகாம் , கொழும்புக்கு வெளியில் வடக்கு,கிழக்கு அல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு முகாம் என இந்த முகாம்கள் இயங்கி வந்துள்ளன எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

விசாரணைகளை நடத்தாமை, பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஐ.நா குழுவின் முன் கடுமையாக சாடியுள்ளது.

சித்திரவதை மற்றும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களை வெளியிட்டுள்ள 55 பெண்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 48 பெண்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் ஆட்சியின் கீழ் 7 பெண்களும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் இராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிலர் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

புதுக்குடியிருப்பிலும் உறுதியுடன் தொடர்கின்றது உண்ணாவிரதப் போராட்டம்!

Next Post

இராணுவ முகாமிற்கு அருகில் மனித புதைகுழி – பல எச்சங்கள் கண்டுபிடிப்பு

Next Post
இராணுவ முகாமிற்கு அருகில் மனித புதைகுழி – பல எச்சங்கள் கண்டுபிடிப்பு

இராணுவ முகாமிற்கு அருகில் மனித புதைகுழி - பல எச்சங்கள் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures