Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பூமிகா | திரைவிமர்சனம்

September 1, 2021
in Cinema, News
0
பூமிகா | திரைவிமர்சனம்
நடிகர் விது
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத்
இசை பிரித்வி சந்திரசேகர்
ஓளிப்பதிவு ராபர்டோ ஜஸாரா
ஊட்டியில் பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு இடத்தை பிளாட் போட்டு விற்கும் பிராஜெக்ட் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் விதுவுக்கு வருகிறது. இதற்காக விது, ஐஸ்வர்யா ராஜேஷ், விதுவின் தங்கை மாதுரி, தோழி சூர்யா கணபதி ஆகியோர் ஊட்டிக்கு செல்கிறார்கள். அங்கு விதுவின் நண்பரிடம் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருகிறது. இறந்த நண்பன் செல்போனில் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருவதை கண்டு விது உள்ளிட்ட அனைவரும் வியக்கிறார்கள். செல்போனை ஆப் செய்து வைத்தாலும் அந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருகிறது. அதை தொடர்ந்து வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில், அந்த செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது யார்? எதற்காக அனுப்புகிறார்கள்? அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பூமிகா விமர்சனம்
படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா கணபதி, மாதுரி ஆகிய நான்கு பேர் மட்டுமே அதிகம் வருகிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். விது, சூர்யா கணபதி அளவான நடிப்பையும், மாதிரி அளவிற்கு மீறிய நடிப்பையும் கொடுத்து இருக்கிறார்கள். காவலாளியாக வரும் பாவெல் நவகீதன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் அவந்திகா வந்தனபூ, வித்தியாசமான கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்து இருக்கிறார். இயற்கை சமந்தப்பட்ட கதையை திகில் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரதீந்திரன். பேய் படங்களுக்கு உண்டான மலைப் பிரதேசம்,  பங்களா, பயங்கர அமைதி, இருட்டு என அதே பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர். பூமிகா சம்பந்தப்பட்ட காட்சிகள், மரம், செடி, கொடிகளை ஓவியங்கள் வழியே காட்டியிருப்பது சிறப்பு.
பூமிகா விமர்சனம்
படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். ஆனாலும் இயற்கைக்கு எதிராக செயல்படாதீர்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு பெரிய பாராட்டுக்கள். பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசையும், ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். திரில்லர் படத்திற்கு தேவையானதை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் ‘பூமிகா’ இயற்கை அழகு. http://Facebook page / easy 24 news
Previous Post

இட்லி, தோசைக்கு அருமையான பூண்டு பொடி

Next Post

வீட்டிலேயே மலபார் பரோட்டா செய்யலாம்!

Next Post
வீட்டிலேயே மலபார் பரோட்டா செய்யலாம்!

வீட்டிலேயே மலபார் பரோட்டா செய்யலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

July 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures