புலிகளின் விமான ஓடுபாதையை புனரமைக்கவே கேப்பாப்பிலவு காணி அபகரிப்பு? படையினர்
முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் தங்களுடைய முகாம்களை அமைப்பதற்கும் தங்களுடைய தேவைகளுக்குமாக பயன்படுத்தவில்லை.
புலிகள் உருவாக்கிய விமான ஓடுபாதை ஒன்றை புனரமைத்து அதற்கான பாதை ஒன்றை அமைப்பதற்காகவே மக்களுடைய காணிகளை விமானப்படையினர் ஆக்கிரமத்திருக்கின்றனர் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 84ம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு கோரும் பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் முன்மொழிந்தார்.
இந்த பிரேரணை மீது கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அண்மையில் பிலக்குடியிருப்பு மக்களையும், அவர்களுடைய காணிகளையும் பார்வையிட்டேன்.
அப்போது விமானப்படையினருடன் உரையாடியபோது மக்களுடைய குடியிருப்புக்கு அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை ஒன்று காண ப்பட்டதாகவும் அதனை புனரமைப்பு செய்து தாங்கள் பயன்படுத்துவதற்கு பாதை ஒன்றை அமைப்பதற்காகவே மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், மக்களுடைய காணிகளை வழங்க முடியாது எனவும் விமானப்படையினர் கூறினர்.
இந்நிலையில் மக்களுடைய குடியிருப்பை தவிர்த்து வேறு வழியாக பாதை அமைத்தால் என்ன என கேட்டபோது குடியிருப்பு தவிர்ந்த மற்றைய பகுதிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் தங்களுடைய பகுதியாக அறிவித்திருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
எனவே நியாயமான காரணம் இல்லாமலேயே விமானப்படையினர் கேப்பாப்பிலவு மற்றும் பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை அவர்களுடைய பயன்பாட்டில் வைத்திருக்கின்றார்கள் என முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இராணுவத்தின் பயன்பாட்டுக்கு தேவையான காணிகளை வழங்குவதற்கு வடமாகாண சபை அனுமதி வழங்க மறுத்துவிட்ட நிலையில், கொழும்பு ஊடாக மாற்று வழியை பயன்படுத்தி படையினருக்கான காணிகளை கையகப்படு த்தி வருகின்றார்கள் என சுட்டிக்காட்டியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படும் எனவும் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் மேலதிக பாதுகாப்பு செ யலாளர் ராஜபக்ஷ விஜயம் செய்துள்ளமை தொடர்பாகவும், யாழ்.மாவட்டத்தில் 1600 ஏக்கர் காணி படையினருடைய தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்,
முன்னர் தங்களுடைய தேவைகளுக்கான காணிகளை எங்களிடம் கேட்டார்கள். ஆனால் அவர்களுடைய கோரிக்கைகளை நாங்கள் முழுமையாக நிராகரித்திருந்தோம்.
இப்போது கொழும்பு ஊடாக மாற்று வழியை பயன்படுத்தி படையினருக்கு தேவையான காணிகளை எடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
எந்த சட்டத்தின் கீழ், எவ்வாறு எடுக்க ன்றார்கள்? என்பதை ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் மேலும் கூ றியுள்ளார்.