Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்!

July 10, 2016
in News, Politics, World
0
புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புலனாய்வினருக்கு இரையாகியுள்ள ஈழத் தமிழர்!

ஈழத் தமிழர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று கொண்டிருக்கிறார்கள். இந்த பாடங்கள் அனுபவங்களினால் வெளிவருவது நம்பிக்கை, துரோகம், ஏமாற்று வித்தைகள், கபட நாடகங்கள, சவாரி போன்றவையே. இவை ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டிருந்தால் அல்லது ஏற்படுவதனால் அவை பற்றி இங்கு ஆராய வேண்டிய தேவையில்லை. ஆனால், ஈழத் தமிழ் இனத்தின் இருப்பை வேறுபட்ட கோணங்களில் நின்று வேரோடு அழிப்பதற்கான திட்டங்களை திரை மறைவில் அரங்கேற்றப்படுபவதை வெளிக்கொண்டு வந்து, காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வரும் அப்பாவி ஈழத் தமிழர்களிற்கு கூறுவது எமது கடமை. இதனால் எமக்கு ஏற்படவுள்ள பிரதிபலிப்புக்கள் முக்கியமல்லா.

தமிழீழ விடுதலைக்கான 25 வருட ஆயுத போராட்டம் வெற்றி நடை போட்டு, புதிய யுகத்தில் இது தான் சுதந்திர தமிழீழம் என நிருபிக்கப்பட்ட வேளையில், மிகவும் வெற்றிகரமாக அவற்றை திட்டமிட்டு சுக்கு நூறாக நசமாக்கியது “புலனாய்வு பிரிவினரே”. இதை முன்னின்று இலங்கை புலனாய்வு பிரிவினர் செய்திருந்தார்கள் என்பதில் எவ்வித ஜயமுமில்லை. ஆனால் இவர்களிற்கு துணையாக உதவியாக செயற்பட்ட வேற்று புலனாய் பிரிவினர் பலர் என்பதை சிலரே அறிவார்கள். ஓர் நாட்டின் இராணுவ நடவடிக்கை என்பது, முற்று முழுதாக புலனாய்வினரிலேயே தங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப்போரின் இறுதி வேளைகளில் தமிழீழ விடுதலை புலிகளின் பல முக்கிய பெயர்வழிகள் வேறுபட்ட புலனாய்வினருடன் இணைந்து செயற்பட்டார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. மறுபுறம், ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளையும் யாரும் குறைத்து கணிப்பிட முடியாது.

மிகவும் கவலையான செய்தி என்னவெனில், வெற்றிகளிற்கு மேல் நூற்றுக்கணக்கான இராணுவ வெற்றிகளை அடைந்த தமிழீழ விடுதலை புலிகளினால், இலங்கை புலனாய்வினரினதோ அல்லது வேற்று புலனாய்வினரின் ஊடுருவலை அறவே கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே 25 வருட கால யுத்தம் முடிவிற்கு வந்துள்ளது. உலகில் எந்த மூலையானாலும் புலனாய்வினரின் செயற்பாடுகளை மிக இலகுவில் இனம் காண முடியாது. இதற்கு உலகில் ஆயிரம் உதாரணங்கள் உள்ளன.

கடந்த வாரம் ஜெனிவாவில் முடிவடைந்துள்ள ஐ. நா. மனித உரிமை சபையின் 32வது கூட்டத் தொடர் பற்றி விபரிக்காது, திடீரென புலனாய்வு செயற்பாடு பற்றி ஆராய வேண்டிய அவசியம் என்ன என யாரும் சிந்திப்பார்களெயானால், இவர்கள் நிச்சயம் ஆராயும் தன்மையை கொண்டவர்களே.

ஈழத் தமிழர்கள் அறிவார்களா?

ஜெனிவாவை தளமாக கொண்டு செயற்படும் ஐ. நா. மனித உரிமை சபை, எந்தவொரு நாட்டினதோ அல்லது இனத்தினதோ அரசியல் தீர்விற்கு முன்னின்று உழைக்க முடியாது என்பதனை எத்தனை ஈழத் தமிழர்கள் அறிவார்கள்? ஐ.நா. மனித உரிமை சபையின் சில முக்கிய விடயங்கள், வருடத்தில் ஒரு தடவை, அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பொதுச் சபையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது என்பதனை எத்தனை ஈழத் தமிழர்கள் அறிவார்கள்? சுருக்கமாக கூறுவதனால், ஈழத் தமிழர்களிற்கான அரசியல் தீர்வை விரும்பும் ஒவ்வொருவரும், இதற்கான உண்மையான அழுத்தங்களை பாவிக்க வேண்டிய இடம் ஐ.நா. பொதுச் சபையே.

ஆனால் இந்த விடயமாக இன்று வரை எந்தவொரு ஈழத் தமிழ் அரசியல்வாதியோ அல்லது அரசியல் செயற்பாட்டாளரோ, ஐ.நா. பொதுச் சபை பக்கம் தலை காட்டியதே கிடையாது என்பதே உண்மை. அப்படியானால் ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் செயற்பாட்டாளா்கள், ஜெனிவா ஐ. நா. மனித உரிமை சபையில் தமது கால நேரத்தை ஏன் வீண் விரயம் செய்கிறார்களென ஒருவர் கேட்டால், இது நிச்சயம் அர்த்தம் உள்ள வினாவாகவே காணப்படும். இங்கு தான் இலங்கை புலனாய்வு பிரிவினரின் செயற்பாடு பற்றியும், வேற்று புலனாய் பிரிவினரின் செயற்பாடு பற்றி ஈழத் தமிழர் விழிப்படைய வேண்டியுள்ளது.

ஐ. நா. மனித உரிமை சபையின் செயற்பாடு பற்றி மிகச் சுருக்கமாக கூறுவதனால், மனித உரிமை சபையோ அல்லது ஐ.நா.மனித உரிமை ஆணையாளரோ, நிச்சயம் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட இன அழிப்பு பற்றியோ அல்லது ஓர் அரசியல் தீர்வு பற்றியோ ஒரு பொழுதும் முக்கியத்துவப்படுத்த போவதில்லை. இவர்கள் இந்த விடயத்தை கையாள்வதற்கு, ஐ.நா. பொதுச் சபையோ அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையோ ஒரு பொழுதும் அனுமதிக்கப் போவதுமில்லை. இதற்கான செயற்பாடும் அங்கீகாரமும் ஜெனிவாவில் இல்லை.

ஐ. நா. மனித உரிமை சபையின் செயற்பாடு என்பது முற்று முழுதாக மனித உரிமை செயற்பாடுகளை அடிப்படையாகவே கொண்டுள்ளது. இவற்றை சுருக்கமாக கூறுவதனால், ஈழத் தமிழர் விசேடமாக முள்ளிவாய்காலின் பின்னர், தமது வேலை திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய இடம் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை, பொதுச்சபையே. இந்த யதார்த்தத்தை, இன்று தாம் அரசியல் வேலை செய்வதாக தம்பட்டம் அடிக்கும் எத்தனை அரசியல் செயற்பாட்டாளர்களோ, ஈழத் தமிழ் அரசியல்வாதிகளோ அறிந்துள்ளார்கள்?

அரசியல் முழக்கம்

இன்று ஜெனிவாவில், அரசியல் முழக்கம் செய்யும் தமிழீழ அரசியல்வாதிகளிற்கு இந்த விடயம் எப்படி தெரியாது போயுள்ளது என்பது முதலாவது கேள்வி? இந்த அரசியல் வாதிகள் ஜெனிவாவிற்கு வரும் ஒவ்வொரு வேளையும் எதை செய்தார்கள்? செய்கிறார்கள்? என்பது அடுத்து கேள்வி? இவர்கள் ஜெனிவாவிற்கு பெரும் எண்ணிக்கையில் சென்று அங்கு எதை சாதித்தார்கள் என்பதை ஒவ்வொரு ஈழத் தமிழர்களால் கேட்கப்பட வேண்டிய கேள்வி? அதேவேளை, இவர்களை யார் ஜெனிவாவிற்கு அழைக்கிறார்கள்? அவர்களது பின்ணணி என்ன? அவர்களிற்கான நிதி, மாதாந்த ஊதியம், வாழ்க்கை செலவுகள் எங்கிருந்து பணம் வருகிறது போன்ற பல கேள்விகளை யாரும் சிந்தித்துள்ளார்களா?

சரியாக என்னால் நினைவு கொள்ள முடியுமானால், 2005ம் ஆண்டளவில், “ஜெனிவாவில் என்னத்தை சாதித்துள்ளீர்களென வினவிய” அதே நபர், இன்று பெரும் தொகை பணத்தை செலவழித்து, கடந்த சில ஆண்டுகளா ஜெனிவாவிற்கு வந்து செல்கிறார்? இப்படியான நபர் ஜெனிவாவில் ஈழத் தமிழ் மக்களிற்காக எதை சாதித்துள்ளார்? எம்மை பொறுத்தவரையில், 1990ம் ஆண்டு முதல், மனித உரிமை செயற்பாட்டிற்கென முதிர்ந்த அனுபவசாலிகளின் வழிநடத்தலில், நாம் இதற்கென பயிற்றப்பட்டு உரம் ஊட்டப்பட்டவர்கள். எமக்கு அன்று கொடுக்கப்பட்ட செயற் திட்டத்தை எம்மால் முடிந்தவரை நிச்சயம் தொடர்ந்து செய்வோம் என்பது உறுதிமொழி. இதற்காக எமக்கு அரசியல் தெரியாது என்பது அர்த்தம் அல்ல. அரசியல்வாதிகள் அரசியல் செயற்பாட்டாளரென தம்மை கூறுபவர்களிற்கு மேலாக, எமக்கு சர்வதேச அரசியல் நன்றாக தெரியும். ஆனால் எமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை எமது பலத்திற்கு ஏற்ற வகையில் செய்து கொண்டிருக்கிறோம்.

உலகில் நடைபெறும் பெரும்பான்மையான விடுதலை இயங்கங்களின் தொடர்புகளை அன்றும் இன்றும் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய வேண்டியவர்கள் அறிவார்கள். இதற்காக ஐ.நா.வில் அங்கத்துவமே அற்ற விடுதலை அமைப்புடன் புகைப்படம் எடுத்து பிரசுரித்து, ஈழத் தமிழ் மக்களுக்கு கபட நாடகம் ஆட வேண்டிய தேவை எமக்கில்லை.

எதை சாதித்துள்ளார்கள்?

ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர் குற்றம், மனிதாபிமான குற்றங்களிற்கு ஐ.நா.மனித உரிமை சபையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களிற்கு ஒவ்வொரு தடவையும் குறை கூறி, ஐ.நா. தீர்மானத்தையும் தீயிட்டவர்கள், இன்று ஜெனிவாவில் அதே தீர்மானத்திற்கு வக்காளத்து வாங்குவதுடன், ஐ.நா.வோ சர்வதேச சமுதாயமோ தமிழீழ மக்களிற்கு ஒன்றுமே செய்யப் போவதில்லை என்ற தமது விதண்டவாத கருத்தையும் பரப்ப தொடங்கியுள்ளார்கள்.

ஐ.நா.மனித உரிமை சபை யாரையும் வெற்றிலை வைத்து அழைப்பதில்லையே! அது ஒரு புறமிருக்க, இவற்றை கூறுவதற்கு பெரும் தொகை பணத்தை செலவு செய்து ஜெனிவா வருவதன் தேவை என்ன? என்பதை சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திக்க வேண்டும். இங்கு தான் இலங்கையின் புலனாய்வும், வேற்று புலனாய்வினரின் திட்டங்கள் வெற்றி காணுகிறது. இவர்களை அழைப்பவர்கள், பக்க கூட்டங்கள் என்ற போர்வையில் றோல்ஸ், வடை போன்ற உணவுகளை ஐ.நா.மனித உரிமை சபையில் பரிமாறி, பத்து பன்னிரன்டு தமிழருடனும், ஈழத் தமிழர் விவகாரம் அறவே விளங்காத நான்கு ஐந்து வேற்று நபர்களுடன் கூட்டங்களை நடத்துவற்கு ஜெனிவா வர வேண்டுமா? இவற்றின் படங்களையும் செய்திகளையும் தணிக்கை செய்து, தமது வழமையான இணைய தளங்களிலும் முக நூல்களிலும் பிரசுரிப்பதனால், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களிற்கு என்ன பயன் கிடைக்கும், கிடைத்துள்ளது? இவை யாரின் பின்னணியில் வழிகாட்டலில் நடைபெறுகின்றன என்பதை யாரும் சிந்திப்பதுண்டா?

கபடத் தன்மை

கபடத்திற்கான இரு உதாரணத்தை இங்கு தருகிறேன். ஐ.நா.மனித உரிமை சபையில் நடைபெறும் பக்க கூட்டங்களிற்கு விநியோகிக்கப்படும் விளம்பரங்களில், ஐ.நா.அந்தஸ்து பெறாத எந்த அமைப்பின் பெயர்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ஐ.நா. வில் குறிப்பிடப்பட முடியாது. இப்படியான சில விடயங்கள் சம்பந்தமாக, இலங்கை அரசுடன் முன்பு பல தடவைகள் நாம் மோதியதுண்டு. ஆனால் தற்பொழுது அரசியல் செயற்பாட்டில் உள்ளதாக கூறப்படும் சில தமிழீழ அமைப்புக்களின் பெயர்கள், பக்க கூட்ட விளம்பரங்களில் நன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதை இலங்கை அரசோ அல்லது அவர்களது ஜெனிவா தூதுவரோ அறிந்தும் எதற்காக மௌனம் சாதிக்கிறார்கள் என்பதற்கு இலங்கை புலனாய்வினரிடமே பதில் உண்டு.

அடுத்து ஓர் அரச சார்பற்ற அமைப்பு ஐ. நா. அந்தஸ்த்தை எப்படியாக பெற முடியும் என்பதனையும் அந்த அமைப்பின் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நாடு (இலங்கை), தமக்கு எதிராக ஐ. நா. செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள அமைப்பின் விண்ணப்பத்தை எப்படியாக நிராகரிப்பார்கள் என்பதனையும் நாம் நன்கு அறிந்தவர்கள். காரணம் 2000ம் ஆண்டு, ‘தமிழர் மனித உரிமை மையத்தின் விண்ணப்பத்திற்கு எதிராக இலங்கை ஐ.நா. வில் போர் கொடி தூக்கிய காரணத்தினாலேயே எமது விண்ணப்பம் அன்று நிராகரிக்கப்பட்டது. இதை கொழும்பு அரசு சார்பு பத்திரிகைகள் அன்று நன்றாக கிண்டல் பண்ணி எழுதியிருந்தன.

ஆனால் தற்பொழுது ஒன்று அல்ல இரண்டு தமிழ் அமைப்புகள் ஐ.நா. அந்தஸத்தை பெறுவதை, இலங்கை அரசு எப்படியாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதற்கும், இவர்களது ஐ.நா. செயற்பாடுகள் பற்றி ஒன்று தெரியாதது போல் இலங்கை அரசு ஏன் பாசாங்கு செய்கிறார்கள் என்பதற்கும், இலங்கை புலனாய்வு பிரிவினரிடமும், இலங்கையின் முன்னாள் தமிழ் அமைச்சர் ஒருவரிடமே பதில்கள் உண்டு. ஆகையால் ஐ.நா.மனித உரிமை சபையில் ஈழத் தமிழர்களின் பெயரால் செய்யப்படும் பல செயற்திட்டங்கள் கபடத் தன்மைகளை கொண்டவை என்பதனை ஈழத் தமிழர் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சரின் ஒருங்கமைப்பு

முன்னாள் ஜனதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்கா, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவரும், தமிழ் நாட்டில் 1986 நடைபெற்ற ஓர் கொலையின் குற்றவாளியாக வர்ணிக்கப்படுபவரை, ஜெனிவா வந்து செல்லும் சில ஈழத் தமிழ் அரசியல்வாதிகளிற்கு கண்ணிலும் காட்டப்படாது என்பார்கள். ஆனால் இந்த முன்னாள் தமிழ் அமைச்சரினால் உருவாக்கப்பட்ட புஸ்வாணம் போன்ற, ‘புஸ்கோ’ என்ற கையாளினால் ஒழுங்கு செய்யப்படும் கபடமான இரு நிமிட உரைக்கு, ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் இரு கிழமைகள் ஜெனிவாவில் காவலிருந்து தமக்கு தெரிந்த மொழியில் மட்டுமல்லாது, தமக்கு தெரிந்த பாணியில் உரையாற்றப்படுகிறது.

இதே போன்ற உரையை ஓர் சர்வதேச அமைப்பு செய்யும் வேளையில் அவற்றை இராஜதந்திரிகள் கவனத்தில் கொள்கிறார்கள். இவர்களது உரை உணர்ச்சிவசம் பொங்கியதுடன், உரையில் ஐ.நா.பொறிமுறைகளிற்கு எந்தவித முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால், இந்த உரைகள் யாவும் காற்றுடன் சங்கமம் ஆகிறது என்பதே உண்மை.

கொலை குற்றவாளியான முன்னாள் அமைச்சரின் அனுசரணையிலேயே, அவரது கையாளான கபட நபர் ‘புஸ்கோ’ – 2009ம் ஆண்டின் பின்னர் ஜெனிவா, பிறசல்ஸ் போன்ற இடங்களிற்கு அனுப்பப்பட்டு, நிதி உட்பட அதற்கான சகல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கபட வேலைத்திட்டத்தினால் ஏமாற்றிய சில ஈழத் தமிழர்களும் இவருக்கு சில உதவிகளை வழங்கினார்கள். ஜெனிவா செயற் திட்டங்கள் யாவும், ‘புஸ்கோ’ தனது எஜமான்களின் கட்டளைகளிற்கு ஏற்றவாறே நடைமுறைபடுத்துகிறார்.

இந்த ‘புஸ்கோ’வின் எஜமானில் ஒருவர், சுவிற்சர்லாந்தில் சுறிச் மாநிலத்திற்கு அருகாமையில் வசித்து வருகிறார். இவர் தனது யாழ் பல்கலைக்கழக காலத்திலேயே, இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவினருடன் இணைந்து வேலை செய்துள்ளது மட்டுமல்லாது, கொழும்பிற்கு அருகாமையில் உள்ள பேலியகொடையில் காவல்துறை அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். இவை யாவும் முன்னாள் அமைச்சரின் ஒழுங்குபடுத்தல்களில் சில. 1990ம் ஆண்டு முதல், எமது செயற்பாடுகளை பல வழிகளிலும் நிர்மூலமாக்க முற்பட்ட மாறுபட்ட இலங்கை அரசுகளும், அதனது புலனாய்வினரும், தற்பொழுது ஜெனிவாவில் ஏதோ நடப்பது போன்ற ஓர் தோற்றத்தை கொடுத்து, அங்கு தமது கையாளான ‘புஸ்கோ’ மூலம், பக்க கூட்டங்கள், இரு நிமிட உரை என்ற கபடம் நிறைந்த செயற் திட்டங்கள் மூலம், தமிழீழ விடயங்கள் யாவற்றையும் ஐ. நா. மனித உரிமை சபையில் பிசு பிசுக்க செய்து வருகிறார்கள். இவற்றை ஐ.நா. பொறி முறைகளை விளங்கியவர்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள். புரியாதவர்களிற்கான விடை கிடைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லையேன நம்புகிறேன்.

புலனாய்வின் வேலைபாடுகள்

ஐ.நா.மனித உரிமை சபையின் சில கூட்டத் தொடரிற்கு தமிழ் நாட்டிலிருந்து வருகை தரும் ஒரு நபர், இந்தியா தமிழீழ மக்களிற்கு ஒன்றும் செய்வதில்லை என கூக்குரலிடும் அதே வேளை, அவர் தமிழ் நாட்டில் உடைப்பது நாசம் செய்வது யாவும் அமெரிக்கா சொத்துக்களான கொக்கா கோலா, மக்டொனால்ட் போன்றவையே. இந்தியாவில் உள்ள கோபத்திற்கு ஏதற்காக அமெரிக்காவின் சொத்துக்களை நாசமாக்கிறார் என்பதை சிந்திக்க தெரிந்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவர் உலகை வலம் வருவதற்கான நிதியை யார் வழங்குகிறார்கள்? இவரை தமிழ் நாட்டில் சிலர், ‘றோமுருகன்’ என குறிப்பிடுவார்களாம்.

இலங்கையில் அரசாங்கம் மாறலாம், ஜனதிபதி, பிரதமர், அமைச்சரவை, மாறலாம் ஆனால் ஈழத் தமிழர் மீதான இலங்கை புலனாய்வினரின் செயற்பாடுகள் ஒரு பொழுதும் மாறப் போவதில்லை. இந்த உண்மையை எமது இளைய சந்ததியினர் நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

சந்திரிக்கா, ராஜபக்ச அரசில் அமைச்சர் பதவி வகித்த தமிழருக்கு மீண்டும், சிறிசேன-ரணில் அரசிலும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ள செய்தியை யாவரும் அறிந்திருப்பார்களென நம்புகிறேன். காரணம் இவரின் கண்காணிப்பில், ஒருங்கிணைப்பில் ஜெனிவா செயற்பாடுகள் மட்டுமல்லாது, புலம் பெயர் வாழ் தமிழர்களில் பெரும்பான்மையான செயற்பாடுகள் திறம்பட செயலிழக்கப்பட்டு வருவதே காரணி.

இளைஞர்கள்

தமிழீழ மக்களின் அவலங்களை நேரில் கண்டு அனுபவித்த சில இளைஞர்கள், தாம் ஏதோ விதத்தில் தமிழீன விடிவிற்கு பங்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், ஜெனிவா ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகளில் தம்மை இணைத்து கொண்டுள்ளது வரவேற்க கூடிய விடயம். ஆனால் இவர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமான முறையில் அணுகாத நிலையில், இவர்களும் இலங்கையின் புலனாய்வினரின் செயற்திட்டங்களிற்கு தம்மை அறியாது, பங்களிக்க வேண்டிய நிலையே உருவாகும். இவர்கள் மீதும் புலனாய்வினரின் தொடர்பாளர்கள் நிச்சயம் சவாரி செய்வார்கள், செய்கிறார்கள்.

மக்கள சமரவீரவிற்கு கைகுலுக்கியவர்களான வணபிதா இம்மானுவேல், போல் நியுமனின் படங்களை பிரசுரித்து, விமர்சித்த இணைய தளங்கள், தங்களது சகாக்கள் மக்கள சமரவீரவிற்கு கைகுலுக்கிய படங்களையும் விபரங்களை தணிக்கை செய்துள்ளனர். தனது 40 வருட கால புலம் பெயர் வாழ்வில், 2007ம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னரே தமிழீழ விடுதலை போராட்டத்தை பற்றி அக்கறை கொண்ட, ‘அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை’ (தமிழ் மக்கள் பேரவை) பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதியும், முன்னாள் அமைச்சரின் வழிநடத்தலில் ஐ.நா.வில் கபட நாடகங்களை மேற்கொள்ளும் சிலரும் மக்கள சமரவீரவிற்கு கை குலுக்கி சுகம் விசாரித்தவர்கள் ஐ.நா.வில் பலர் முன்னிலையில நடைபெற்றது. இதை தான் சொல்வார்கள் ‘படிப்பது தேவராம் இடிப்பது சிவன் கோவிலென’ இந்த கபட நாடகங்களை யாவரும் அறிந்திருக்க வேண்டும்.

இவர்கள் மீது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (தமிழ் மக்கள் பேரவை) சட்ட நடவடிக்கை எடுப்பார்களா? ஒர் அமைச்சர் என்பவர் கொள்கை அடிப்படையில் வேலை செய்பவர். ஆகையால் அமைச்சருடன் கைகுலுக்குபவர்கள் நிச்சயம் அவர்களது கொள்கைகளிற்கு உடந்தையானவர்களே. ராஜதந்திரி என்பவர் ஊதியத்திற்காக எந்த அரசின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்.

காலம் கனித்து வரும் வேளையில் இவர்களிற்கு பதில் கிடைக்கும் என நம்பகிறேன். “கொள்கை உள்ளவனிற்கு ஒரு வாழ்க்கை, கொள்கை அற்றவனிற்கு பல வாழ்க்கை” என்பது முது மொழி.

(தொடரும்)

Tags: Featured
Previous Post

கனடாவின் எதிர்கால பிரதமர் நாடாளுமன்றில்

Next Post

சித்திரவதைக்கு உள்ளானவர் பிரித்தானியா திரும்பினார்! இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்குதாக்கல்

Next Post
சித்திரவதைக்கு உள்ளானவர் பிரித்தானியா திரும்பினார்! இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்குதாக்கல்

சித்திரவதைக்கு உள்ளானவர் பிரித்தானியா திரும்பினார்! இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்குதாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025

Recent News

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures