புற்று நோய் என போலித்தனம் செய்து மோசடி செய்த பெண்!
கனடா-ஹமில்ரனை சேர்ந்த 33வயது பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் என போலித்தனம் செய்து குற்றத்தை ஒப்பு கொண்டதால் இரு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மாகாண திட்டத்தை மோசடி செய்தார் என இவர் குற்றம் சுமத்தப்பட்டார். போலி ஆவணத்தை கொடுத்து ஏமாற்றிய இவர் தனது குற்றத்தை ஒப்புகொண்டார்.
சாரா லூக்கஸ் என்ற இப்பெண் 2015 நவம்பரில் ஒன்ராறியோ ஊனமுற்றோர் ஆதரவு திட்டத்தில் மனுதாக்கல் செய்தபின்னர் இடம்பெற்ற விசாரனையில் இவரது மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
புற்றுநோய் சிகிச்சைக்காவும் சிகிச்சை பெறும் சமயத்தில் வசிப்பதற்காக ஹொட்டேல் ஒன்றில் வதிவிடத்திற்காகவும் மனு தாக்கல் செய்திருந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
மோசடி செய்த தொகை$219,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.