புத்தளம் மாவட்டம், புளிச்சாக்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்களின் பாவனைக்கு நேற்று கையளித்தார்.
இத்திட்டத்தின் மூலம் இணங்காணப்படாத சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும். இதன்மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
இத்திட்டம் 2.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.