பிள்ளைகளை காப்பாற்ற முயன்று முடமாக்கப்பட்ட தாய்.

பிள்ளைகளை காப்பாற்ற முயன்று முடமாக்கப்பட்ட தாய்.

கனடா- எட்மன்டன் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் விழுந்து கொண்டிருந்த மரமொன்றின் வழியில் இருந்து தனது பிள்ளைகளை காப்பாற்ற முயன்றதால் நடக்க முடியாத நிலைக்கு ஆளானார்.
ஆறு வாரங்களிற்கு முன்னர் ஜசிக்கா டிக்ஸ் என்ற 27வயதுடைய அத்தபாஸ்கா அல்பேர்ட்டாவை சேர்ந்த இவர் தனது 3 பெண் பிள்ளைகான டிலன் 6வயது, அலி 4வயது மற்றும் சார்லி 10-மாதங்கள் ஆகியோருடன் காம்பிங் பயணம் சென்றார்.
பிள்ளைகள் குடும்ப கூடாரத்தில் மழை பெய்து கொண்டிருந்த காலை நேரத்தில் விளையாடிக் கொண்டிருக்கையில் மரம் ஒன்று முறிந்து விழும் சத்தத்தை கேட்டார். விழுந்த மரம் கூடாரத்தின் மேல் விழ இருந்த சமயம் பிள்ளைகளை பாதுகாக்க நினைத்து ஓடிய போது மரம் இவருக்கு மேல் விழுந்து விட்டது.
அதன் பின்னர்  வைத்தியசாலையில் நினைவற்ற நிலையில் இருந்து 3வாரங்களின் பின்னர் கண்விழித்துள்ளார்.
இவருக்கு ஏற்பட்ட தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டது.விலா எலும்புகள், மார்பெலும்புகள் முறிந்து விட்டன. தலையில் பலத்த வெட்டு, முள்ளந்தண்டு பாதிப்பு மற்றும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. பிள்ளைகள் காயமற்று தப்பி விட்டனர்.
டிக்சினால் ஒரு போதுமே நடக்க முடியாத நிலைமை கூட ஏற்படலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது குழந்தைகளை காப்பாற்றியதால் தனக்கு ஏற்பட்ட காயங்கள் மதிப்பானவை என டிக்ஸ் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் இருக்கும் டிக்ஸ் 12-வாரங்கள்  மறுவாழ்வு மையத்திற்கு செல்ல உள்ளார்.மார்பிற்கு கீழ் பகுதி அசைக்க முடியாத நிலையில் உள்ளார்.
இணையத்தள  crowdfunding பக்கம் மூலம் டிக்சிற்கு உதவும் பொருட்டு 37,000 டொலர்கள் நிதி சேர்க்கப்பட்டுள்ளது.
இவரை ஒரு ஹீரோ என அழைத்தாலும் தான் ஹீரோ ஆவதற்காக இவ்வாறு செய்யவில்லை. நான் ஏன் செய்தேன் என்பது எனக்கு தெரியும் என கூறினார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *