பிளாஸ்டிக் குளியலறை பொருட்களுக்கு அடுத்த ஆண்டுமுதல் தடை

பிளாஸ்டிக் குளியலறை பொருட்களுக்கு அடுத்த ஆண்டுமுதல் தடை

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் அடங்கிய குளியலறைப் பொருட்களான ஷவர் ஜெல், பற்பசை மற்றும் facial scrubs ஆகியவற்றின் விற்பனைக்கு கனேடிய மத்திய அரசாங்கம் தடை விதிக்கவுள்ளதாகத் அறிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக் கிழமை) வெளியான இந்த அறிவிப்பானது, சுற்றுச் சூழல் மாசுபாடுகளை குறைக்கும் வகையிலேயே விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்த அறிக்கையில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் அடங்கிய மேற்குறித்த வகை உற்பத்திகளுக்கு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களில் காணப்படும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் பாவனையின் பின்னர் நீரோட்டத்தின் மூலமாக ஆறுகளையோ, கடலையோ சென்றடைகின்றது. இது விலங்குகளின் உடலில் சேர்வதால், அவை பாதிப்பிற்குள்ளாகின்றமை சுட்டிக்காட்டத்தது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *