அனைத்து வாசகர்களுக்கும் சோபகிருது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் நாள் (சித்திரை 1) தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றான இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் சூரியன் முதல் ராசியான மேஷத்தில் பெயர்ச்சியாகும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகின்றது.
60 ஆண்டுகளை கொண்ட தமிழ் வருடத்தில் தற்போது சுபகிருது ஆண்டு நேற்றுடன் முடிவடைகிறது. இன்று சித்திரை மாதம் முதல் திகதியில் இருந்து சோபகிருது ஆண்டு தொடங்குகின்றது.
அனைவருக்கும் சோபகிருது புதுவருட வாழ்துக்கள் !
திருக்கணித பஞ்சாங்கம்
புதுவருடப் பிறப்பு
14.04.2023வெள்ளிக்கிழமை பிற்பகல் 2. 59 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது.
விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம்
14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.59 மணி முதல் மாலை 6.59 மணி வரை (தலை – கொன்றை இலை, கால் – புங்கை இலை, திசை – கிழக்கு அல்லது வடக்கு)
ஆபரணங்கள்
முத்து, வைரம் பதித்தவை
ஆடைகள்
வெள்ளை பட்டாடை, மஞ்சள் கரை வைத்த வெள்ளை ஆடை
கைவிசேட நேரம்
15ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.45 – 7.30 மற்றும் காலை 8.00 – 8.55
16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 – 9.30 மற்றும் நண்பகல் 12.10 – பிற்பகல் 1.15
தோஷ நட்சத்திரங்கள்
ரோகிணி, மிருகசீரிடம் (3,4 பாதங்கள்), திருவாதிரை, புனர்பூசம் (1,2,3 பாதங்கள்), அஸ்தம், உத்தராடம் (2,3,4 பாதங்கள்), திருவோணம், அவிட்டம் (1,2 பாதங்கள்)
வியாபாரம், புதுக்கணக்கு ஆரம்பித்தல்
26.4.2023 புதன்கிழமை காலை 7.32 மணி முதல் 9.05 மணி வரை
03.05.2023 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 8.40 மணி வரை
05.05.2023 வெள்ளிக்கிழமை காலை 7.15 மணி முதல் காலை 8.28 மணி வரை
வாக்கிய பஞ்சாங்கம்
புது வருடப் பிறப்பு
14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.03 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது.
விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம்
14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.03 மணி முதல் மாலை 6.03 மணி வரை (தலை – கொன்றை இலை, கால் – புங்கை இலை, திசை – கிழக்கு அல்லது வடக்கு)
ஆடைகள்
வெள்ளை பட்டாடை, வெள்ளை கரை வைத்த புதிய பட்டாடை
ஆபரணங்கள்
முத்து, வைரம் பதித்தவை
கைவிசேட நேரம்
15ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.52 – 9.00
16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.49 – 9.48
வியாபாரம், புதுக்கணக்கு ஆரம்பித்தல்
11.05.2023 வியாழக்கிழமை முற்பகல் 10.24 மணி முதல் நண்பகல் 12.27 மணி வரை