நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிய பின்னர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிராக பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக செயற்பட முனைந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதாகவும், இன்றைய தினம் பாராளுமன்றம் கூடியதன் பின்னர் அரசாங்க கட்சிக்குரிய ஆசனங்களில் அமரவுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன வழமைபோன்று எதிர்க் கட்சியில் அமரும் எனவும் கூறியுள்ளார்.










