பிரேசில் சிறைக்குள் பாரிய கலவரம் : கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு
பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இருதரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர்.
சம்பவத்தில் 10 கைதிகள் உயிரிழந்துள்ளதோடு பெரும்பாலானோர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறைக்குள் தொடர்ந்து துப்பாக்கி சண்டையும், வெடி குண்டு சத்தமும் கேட்பதாகவும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.