பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என டிரம்ப் அரசாங்கம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உலக நாடுகளின் பார்வையை தம்மீது குவித்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்கர் அல்லாதவர்களை சுற்றுலாவுக்கு அனுமதிக்க முடியாது என அடுத்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனால் அமெரிக்கரல்லாத வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அவர்களது நாட்டு தூதரகங்கள் வழியாக வெள்ளை மாளிகையில் சுற்றுலாவுக்கு அனுமதி கோர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த அறிவிப்பு வெளியான உடனையே வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகமானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் குறித்த அனுமதி கேட்டி கோரும் திட்டமானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக கோரிக்கை விடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
மட்டுமின்றி தற்போதைய சூழலில் எந்த ஒரு விண்ணப்பத்தையும் பரிசீலிக்க்கும் வாய்ப்பு இல்லை எனவும் பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுவரை Pentagon மற்றும் வெள்ளை மாளிகையில் எவ்வித சிக்கலும் இன்றி எந்த நாட்டு பிரஜையும் உரிய அனுமதியுடன் சுற்றுலா சென்று வரலாம்.
ஆனால் தற்போது டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை விண்ணப்பம் உள்ளிட்ட அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.