லண்டனில் உள்ள பிரித்தானியா பாராளுமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் பிரித்தானியா பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து தற்போது மர்ம நபர் கத்தியுடன் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது பாராளுமன்ற வளாகத்தில் நுழைய முயன்ற நபரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவன் இரண்டு கத்திகள் வைத்திருந்தது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து, பொலிசார் உடனே குறித்த நபரை அதிரடியாக கைது செய்து, அவன் வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, பாராளுமன்ற சாலை மூடப்பட்டு பொலிசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த விசாரணை மேற்கொண்டு வருவதால் இதுவரை மர்ம நபரை குறித்த தகவலை பொலிசார் வெளியிடவில்லை.