பிரித்தானியாவின் மிக கொடூரமான குற்றவாளிகள் இவர்கள்தான்: வெளியானது 31 பேரின் பட்டியல்
பிரித்தானியாவில் சட்டத்தின் சரணடையாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கும் கொடூரமான குற்றவாளிகள் 31 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் முகமை.
பிரித்தானியாவில் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து சட்டத்தின் பிடியில் சிக்காமல் 31 கொடூர குற்றவாளிகள் தற்போதும் தலைமறைவாக வாழ்ந்து சமூகத்திற்கு அச்சுறுத்தலாக வாழ்ந்து வருவதாக குற்றவியல் முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியலில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் வாகன சாரதி என்ற போர்வையில் இளம் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய Rezgar Zengana என்பவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
வெளியான பட்டியலில் குறிப்பிட்டுள்ள நபர்கள் தொடர்பான தகவல் தெரிய வரும் பொதுமக்கள் 0800 555 111 எனும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்களை அதிகாரிகள் ரகசியமாக வைத்திருப்பார்கள் என்ற உத்தரவாதமும் குற்றவியல் முகமை அளித்துள்ளது.
- Shane O’Brien – 2015 ஆம் ஆண்டில் இருந்தே தேடப்படும் கொலைக் குற்றவாளி. குறித்த நபரை கைது செய்யும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு 10,000 பவுண்ட்ஸ் வெகுமதி அறிவித்துள்ளனர்.
- Mark Acklom – பண மோசடியில் சிக்கி தலைமறைவானவர்.
- Sarah Panitzke – ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை முறைகேடு செய்து விட்டு தலைமறைவாக உள்ளவர்.
- Fatah Benlaredj – 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்தே தேடப்படுபவர்.
- Jamie Acourt – போதை மருந்து கடத்தல் குற்றவாளி
- David Ungi – 24 வயதாகும் இவர் தேடப்படும் கொலைக் குற்றவாளி
- Costas Sampson – பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி
- Timur Mehmet – பொதுமக்கள் பணத்தை முறைகேடு செய்த குற்றத்திற்காக தேடப்படுபவர்.
- Christopher Guest More – 2003 ஆம் ஆண்டில் இருந்தே தேடப்படும் கொலைக்குற்றவாளி.
- Kevin Thomas Parle – 2004 ஆம் ஆண்டில் இருந்தே தேடப்படும் கொலைக்குற்றவாளி.