பிரிட்டிஷ் விமானம் வன்கூவரிற்கு அவசர திசை திருப்பம்?

பிரிட்டிஷ் விமானம் வன்கூவரிற்கு அவசர திசை திருப்பம்?

மர்மமான உடல்நல குறைவு பயணிகளை தாக்கியதன் காரணமாக சன் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் எயர்நிறுவனத்தின விமானம் வன்கூவரிற்கு திசை திருப்பபட்டது.

A380 விமானத்தில் பயணித்த பணி குழுவினர் விமானிகள் மற்றும் பயணிகள் புகை மூட்டத்தால் அவதிப்பட்டதாகவும் அவர்கள் உடனடியாக ஓடு தளத்தில் காத்திருந்த அவசர் சேவை வாகனங்களில் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டதாகும் கூறப்படுகின்றது.

இயந்திரத்தின் தீப்பொறிகள் கசிந்ததனால் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்றது.

ஆனால் சம்பவம் நடந்து எட்டு மணித்ததியாலங்களின் பின்னர் BA இது காரணமில்லை என மறுத்துள்ளது. இது குறித்து புலன்விசாரனை நடை பெறுகின்றது. மற்றய விமானங்கள் பாதிக்கப்படவில்லை.

ஊழியர்கள் உறுப்பினர்களின் உடல்நல குறைவினால் விமானம் முன்கூட்டி அறிவிக்கப்படாத தரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோயாளிகளின் அறிகுறிகள் குறித்த தகவல்களை வெளியிட சுகாதார அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

22கபின் குழு அங்கத்தவர்களும் 3 விமானிகளும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
திடீர் திசை திருப்பலிற்கான விளக்கம் வெளியிடப்படவில்லை.

plane3plane1plane2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *