பிரான்ஸ் இரயில் நிலையத்தில் 3 பேருக்கு கத்தி குத்து! பதற்றத்தில் மக்கள்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இது எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
நேற்று இந்த இடத்துக்கு வந்த மர்மநபர், ரயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பயணியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூன்று முறை குத்தினார்.
பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அருகிலிருந்த மக்கள் கத்தி குத்து வாங்கிய நபரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
அவருக்கு தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்த பின்னர் அதே இரயில் நிலையத்தில் வேறு இரண்டு பிளாட்பாரங்களில் இதே போல இரண்டு நபர்களை மர்ம ஆசாமி கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுப்பட்டது ஓரே ஆள் தான் என நாங்கள் கருதுகிறோம். அந்த நபருக்கு இவர்கள் யார் என தெரியாது.
அதனால், அவன் சைக்கோவா அல்லது தீவிரவாதியா என விசாரணை நடத்தி வருகிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையில் பிரான்ஸ் நாட்டுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே அரசு கூறியுள்ளதால், இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.