பிரம்ரன் வீட்டு தீயில் மூவர் மரணம்.சிறுமி படுகாயம்!

பிரம்ரன் வீட்டு தீயில் மூவர் மரணம்.சிறுமி படுகாயம்!

ரொறொன்ரோ-பிரம்ரன் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் மூவர் மரணமடைந்ததுடன் சிறுமி ஒருத்தி ஆபத்தான காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்சி பகுதியில் மடிசன் வீதி மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அதிகாலை 4மணியளவில் விபத்து நடந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் முதல் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைய முன்னர் நிலக்கீழ் பகுதியில் குடியிருந்தவர் கதவை உடைத்து திறந்து வெளியே வந்து முன்வாசல் கதவையும் உடைத்து திறந்து உள்ளே சென்று தீக்குள் அகப்பட்டு கொண்டிருந்த சிறுமியை காப்பாற்றியதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி பலத்த எரிகாயங்களிற்கு ஆளாகியிருந்ததாகவும் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு 10-நிமிடங்கள் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் வீட்டின் உள்ளே நுழைந்த போது படுக்கை அறைகளிற்குள் மூவர் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் எதனையும் பொலிசார் வெளியிடவில்லை.

இக்கொடிய தீக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் முனைந்துள்ளனர். புகை அலாரங்கள் இயக்கத்தில் இருந்தனவா என்பது தெரியவரவில்லை. தீ மிகவும் வேகமாக பரவியதால் மூவரும் வீட்டிற்குள் அகப்பட்டு கொண்டனர். இச்சம்பவம் மிகவும் கொடுமையானதாகும. சம்பவத்தை நெருங்கிய உறவினர்களிற்கு தெரியப்படுத்தும் முயற்சியில் பொலிசார் முனைந்துள்ளனர்.

bra1bra3bra2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *