Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரபாகரனுக்கு நடந்ததை கூறினார் கமால் குணரட்ன – பாலச்சந்திரன் எங்கே?

September 14, 2016
in News, Politics
0
பிரபாகரனுக்கு நடந்ததை கூறினார் கமால் குணரட்ன – பாலச்சந்திரன் எங்கே?

பிரபாகரனுக்கு நடந்ததை கூறினார் கமால் குணரட்ன – பாலச்சந்திரன் எங்கே?

நீண்ட காலமாக மெளனித்துவிட்ட விடுதலைப்புலிகள் என்ற வார்த்தை தற்போதுஅரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ தலைவர்கள் தரப்பின் மூலமாகவெளிவரத்தொடங்கியுள்ளது.

இவற்றுக்கான முக்கிய காரணம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக என அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலைஅண்மையில் வெளியிட்டு வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் மற்றும் செய்திகள் போன்றவற்றில் யுத்தகாலகட்டத்தில் நிறைவேறிய அல்லது கூறப்பட்ட கருத்துகளுக்கு முற்றாக மாறுபட்ட கருத்துகளையே வெளியிட்டு வருகின்றார்.

பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் என்ன ஆனார் என்பது எனக்குத் தெரியாது என்று மேஜர் கமால் குணரட்ன அண்மையில் ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாகவும் பல தகவல்கள் கூறப்பட்டன அவை இராணுவ தரப்பினாலும் இலங்கை அரசினாலும் உறுதிப்படுத்தப்படவும் செய்யப்பட்டமை அறிந்ததே.

அதன் பின்னர் தற்போது பாலச்சந்திரன் என்ன ஆனார் என்று எனக்கு தெரியாது என்று மேஜர் கூறுவதன் மூலம் அவர் எதனை முன்வைக்க முயல்கின்றார்.

செனல் 4 ஊடகம் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக தகவல்களை வெளிப்படுத்தியது, அதே சமயம் கமால் குணரட்னவின் படைப்பிரிவின் மூலமாகவே கொல்லப்பட்டதாகவும் செய்திகள் புகைப்படங்களுடன் வெளிவந்தன.

இவ்வாறான செய்திகளுக்கு பின்னர், அதற்கு காரணியாக அமைந்த கமால் குணரட்ன பிரபாகரனின் மரணம் தொடர்பில் வெளிப்படையாக கூறினார். அதே சமயம் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் தன்னுடைய 700 பக்க புத்தகத்தில் எங்குமே பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரணம் தொடர்பில் கூறவில்லை என்பது பாரியதொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அவர் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்த கூடாது என்றுகட்டாயப்படுத்தப்பட்டிருப்பார். கடமையில் இருக்கும் போது அரசுக்கு எதிரான அல்லது நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் யுத்த நிலவரங்கள் வெளிப்படுத்தப்படக்கூடாது என்பது சட்டமாகவே உள்ளது.

இது அனைத்து நாடுகளிலும் இராணுவத்தில் உள்ள வழக்கமே அதன் காரணமாக உண்மைகள் அல்லது முக்கிய விடயங்கள் மறைக்கப்பட்டன.

எனினும் தற்போது பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மறைக்கப்பட்டவை வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனாலும் உண்மைகளை கூறுமிடத்து ஒருவேளை அவை இராஜ துரோகமாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது.

சரத்பொன்சேகாவிற்கு ஏற்பட்ட இராஜ துரோக தண்டனை மற்றும் களங்கப் பெயர் தனக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தும் முகமாக மறைமுகமான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு.

இவ்வாறான காரணங்களினால் சந்தேகத்துக்குரிய சர்ச்சையான விடயங்கள் தொடர்பில் வெளிப்படையான கருத்துகளை முன்வைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் தற்போது அவை சிறிது சிறிதாக வெளிப்படுத்தப் படுகின்றது என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

Tags: Featured
Previous Post

ஆப்ஸ் பயன்பாட்டில் அப்பிளை மிஞ்சும் சம்சுங்

Next Post

கேணல் கலையழகனின் மனைவியை கொழும்பு இரண்டாம் மாடிக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவு

Next Post
கேணல் கலையழகனின் மனைவியை கொழும்பு இரண்டாம் மாடிக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவு

கேணல் கலையழகனின் மனைவியை கொழும்பு இரண்டாம் மாடிக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures