பிரபல WWE மல்யுத்த வீரர் மரணம்
WWE மல்யுத்த வீரரான ஜாம்பவான் Ron Bass (68) உடல் நலக்குறைவால் காலமானார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் WWE மல்யுத்த போட்டிகள் பிரபலமாக ஆரம்பித்த 1980களில் Ron Bass அதில் பங்கேற்க ஆரம்பித்தார்.
The Barber Beefcake , Shawn Michaels, Junkyard Dog போன்ற பல மல்யுத்த ஜாம்பவான்களுடன் Ron Bass மல்யுத்த களத்தில் மோதியுள்ளார்.
Survivor Series, Royal Rumble, Wrestlemania போன்ற பல முக்கிய மல்யுத்த போட்டிகளில் Ron Bass பங்கேற்று பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.
குடல் நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த Ron சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
Ron மறைவுக்கு Hulk Hogan, Iron Sheik போன்ற மல்யுத்த ஜாம்பவான்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
80களில் மிக பெரிய மல்யுத்த வீரராக Ron Bass திகழ்ந்தார் என WWE அமைப்பு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளது.