Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிப்பு

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி இன்று சபாநாயகரிடம் கையளிக்கும் என்று அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இதே வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி ஆதரிக்கும் எனவும் ஆட்சியை வீழ்த்தும் வரையில் நெருக்கடி கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ள நிலையில் பொது எதிரணியும் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது. இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவரவுள்ளோம். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று சபாநாயகரரிடம் ஒப்படைக்கவுள்ளோம். பொது எதிரணியின் 52 உறுப்பினர்களும் இதில் கைச்சாத்திட்டுள்ளதுடன் ஏனைய தரப்பின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவரை நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆகவே அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம், அதேபோல் நாம் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அணியின் ஆதரவையும் பெற்றுக்கொள்வோம். எம் அனைவரதும் நோக்கம் ஒன்றாக உள்ள நிலையில் முரண்பாடுகள் ஏற்படாது நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்வதே இப்போதுள்ள தேவையாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊழல் அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே மக்கள் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினை ஆதரித்தனர். ஆகவே இந்த அரசாங்கம் மக்கள் பலம் இழந்துவிட்டது என்பதை இன்று ரணில் -மைத்திரி கூட்டணி அறிந்துள்ளது.

இனியும் இவர்கள் ஆட்சியினை கொண்டுசெல்ல முடியாது. நாளுக்கு நாள் போராட்டங்களும் மக்கள் எதிர்ப்பு அலைகளும் அதிகரிக்கும். கள்ளர்களை காப்பாற்றும் இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் வரையில் எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கள்ளர்களை காப்பாற்றுகின்றார்.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆணையாளர் அர்ஜுன் மஹேந்திரன் தேடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் சிங்கப்பூர் சென்றார். மாநாட்டில் கலந்துகொள்ள சென்றதாக கூறுகின்றார். ஆனால் அவர் கள்ளர்களை சந்திக்கவே அங்கு சென்றார்.

இன்று நாட்டில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளை பிரதமரே காப்பாற்றி வருகின்றார். இந்த ஆட்சி இருக்கும் வரையில் கள்ளர்கள் தண்டிக்கப்படப் போவதில்லை. மீண்டும் எமது ஆட்சியினை நாம் கைப்பற்றிய பின்னர் சகல குற்றவாளிகளையும் தண்டித்து நியாயத்தை நிலைநாட்டுவோம் எனவும் அவர் குறிபிட்டார்.

Previous Post

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது.

Next Post

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று முழு கதவடைப்பு

Next Post
அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று முழு கதவடைப்பு

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று முழு கதவடைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures