Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த ஐ .தே .க பாராளுமன்ற உறுப்பினர்கள்

April 19, 2019
in News, Politics, World
0

அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் 38 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளனர்.

அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை நீக்கி, ஒரே நிலைப்பாட்டில் கட்சியை முன்நடத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்ற நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கருத்து முரண்பாடுகள் இருப்பின் அவை குறித்து கட்சிக்குள் கலந்துரையாடி தீர்வை பெறுமாறும் பொதுவெளியில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் இருவருக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமையினால் இனி குழப்பம் ஏற்படாது என ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு

Next Post

கோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள

Next Post

கோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures