பியர்சன் சர்வதேச விமானத்தில் தொடரும் டெல்ரா விமான சேவை தடையினால் குவியும் சனத்திரள்?
கனடா-டெல்ரா விமான சேவைகளின் கணனி சேவைகள் செயலிழந்தைமையால் உலகளாவிய ரீதியில் இன்று காலை குறிப்பிட்ட விமான சேவை விமானங்கள் தடைப்பட்டடன. இதனால் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலைய டெர்மினல் 3-ல் சனத்திரள் குவிந்த வண்ணம் உள்ளது.
இன்று காலை 60 விமானங்கள் பியர்சன் விமான நிலையத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பெரும்பாக விமான நிலையங்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அட்லான்டாவில் இன்று காலை ஏற்பட்ட மின் செயலிழப்பினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தாமதங்களும் ரத்து செய்தலும் பாரிய அளவில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை மீள பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3மணியளவில் சான் பிரான்சிஸ்கோவில் திருமணம் செய்து கொள்ளவேண்டிய இருவரின் நிலைமையை இக்கட்டாக்கியுள்ளது.