Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலஸ்தீனை அங்கீகரிப்பதுபோல தமிழர்களுக்கும் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் | மனோ

October 21, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தேரர்களின் நடத்தை | இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் | மனோ கணேசன் எம்பி

பலஸ்தீனத்திற்கு அனுதாபம் தெரிவித்து எப்படி அந்த நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரிவிக்கையில்,

காஸாவில் நடக்கும் மோதல் நிலைமையால் துன்பப்படும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய மக்களுக்கும் அனுதாபத்தை கூறிக்கொள்கின்றேன்.

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் அடாவடியாலேயே இந்த சம்பவங்கள் நடக்கின்றன. அங்கே காஸாவில் மருத்துவமனை மீது குண்டு விழுந்துள்ளது. பாடசாலைகள், மக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் விழுகின்றன. இலங்கையிலும் இதுவே நடந்தது.

எவ்வாறாயினும் யுத்தம் தீர்வாக அமையாது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இதற்கான தீர்வுக்கு மூலக் காரணத்தை கண்டறிய வேண்டும்.

இன்று ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன பல் இல்லாத பாம்புகளை போன்றே இருக்கின்றன. எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை விடயத்திலும் அப்படித்தான். இலங்கையில் நடந்த யுத்தம் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இருந்தது. சர்வதேச சமூகம் என்று ஒன்று உள்ளது. அவர்களுக்கு நீதி, நியாயம் கிடையாது. ஐநாவை பொறுத்தவரை இலங்கை யுத்தத்தின் பின்னர் அவர்களின் உள்ளக அறிக்கையில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. தமிழ் தரப்பில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற கருத்து உள்ளது. ஐநா இதன்மூலம் பாடம் படித்துள்ளதாக கூறப்பட்டாலும் அது நடக்கவில்லை. இல்லாவிட்டால் காஸாவில் இந்த நிலைமை இருக்காது.

எவ்வாறாயினும் நாங்கள்தான் இந்த சம்பவத்தில் இருந்து பாடம் படித்துக்கொள்ள வேண்டும். ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ எங்களை காப்பாற்றாது. நாங்களே எங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.

பலஸ்தீனத்தில் கிழக்கு ஜெருசலத்தை அடிப்படையாகக் கொண்ட பலஸ்தீனம் நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும். அதேபோன்று இஸ்ரேலின் இருப்பையும் பலஸ்தீனம் அங்கீகரிக்க வேண்டும். அதுவே நியாயமான தீர்வாக அமையும். இங்கே தனிநாடு கோரிக்கை காணாமல் போய்விட்டது. ஆனால்  தமிழரும், சிங்களவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால், நடந்த அநீயாயங்களை நாங்கள் புரிந்துகொண்டிருந்தால் பலஸ்தீனத்திற்கு ஒரு நியாயமும் இலங்கைக்கு இன்னுமொரு நியாயமும் இருக்க முடியாது.

ஆகவே இலங்கைக்குள் வாழும் தமிழர்களுக்கு ஒரே இலங்கைக்குள் நியாயமான சுயாட்சியை வழங்கி அங்கீகாரத்தை தந்து, பலஸ்தீனத்தை எப்படி இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இஸ்ரேலை பலஸ்தீனம் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இங்கு தமிழரும் சிங்களவரும் ஒருவரையொருவர் அங்கீகரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றார். 

Previous Post

பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து முழுமையாக நீக்கவே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது | ராஜித

Next Post

யாழ். விமான நிலையத்திற்கு வருவோருக்கு ஏற்பட்டுள்ள நிலை

Next Post
வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் நாட்டுக்குள் வர 13ஆம் திகதி வரை தடை

யாழ். விமான நிலையத்திற்கு வருவோருக்கு ஏற்பட்டுள்ள நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures