பாரிஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்? மீண்டும் பயங்கரவாதிகள் வெறியாட்டம்!
பாரிஸ் நகரின் பிரபல ரயில் நிலையத்தில் திடீரென்று வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிஸ் நகரின் பிரபலமான Place d’Italie ரயில் நிலையத்தில் குறித்த தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் நெருப்பும் கரும்ப்புகையும் எழுந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குறித்த சம்பவமானது பயங்கரவாதிகள் தாக்குதல் என கருதி ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 8 பேருக்கு காயமேற்பட்டுள்ளதாகவும், அதில் சிலர் கரும் புகை மண்டலத்தில் சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சேர்ப்பித்துள்ளனர். மட்டுமின்றி Bastille மற்றும் Place d’Italie பகுதியில் போக்குவரத்தை தாற்காலிகமாக தடை செய்துள்ளதாகவும், குறித்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.