பாராளுமன்ற ஹில்லில் சந்தேகத்திற்கிடமான பொதி?

சந்தேகத்திற்கிடமான பொருட்களடங்கிய பை ஒன்றை ஒட்டாவா பாராளுமன்ற ஹில்லின் முன்னால் அமைதிக்கான கோபுரத்தை நோக்கி வீசியதன் காரணமாக மனிதன் ஒருவர் மீது குறும்பு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
செவ்வாய்கிழமை காலை 11மணியளவில் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு பையை சோதனை செய்தனர். பைக்குள் சரியாக என்ன இருந்ததென்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. ஆனால் அது சந்தேகத்திற்கிடமானதென  கருதப்படுகின்றது.
இச்சம்பவம் காரணமாக ஒரு குறுகிய வெளியேற்றம் அரசாங்க கட்டிடத்தின் மைய- செனெட் சேம்பர்கள் மற்றும் கீழ் சபை அமைந்திருந்த பகுதிகள்-பகுதியில் ஏற்பட்டது.
செவ்வாய்கிழமை பிற்பகல் பாராளுமன்ற ஹில் நடவடிக்கைள் வழமைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மே 1-வரை இடைவேளையில் உள்ள காரணத்தால் அங்கு அமைதி நிலவியது.

sus3sus1sussus2sus4

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *