நாடு பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலவீனமாக காணப்படுவதை பயங்கரவாதிகள் அடையாளம் கண்டுகொண்டதனாலேயே ஆலயங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் இது போன்ற குண்டுத் தாக்குதல்களுக்குள்ளானது என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தாக்குதல்தாரிகளின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இதன் பின்னர் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாமல் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே இதற்கு முன்னர் சமய ஸ்தானங்களுக்கு இதுபோன்ற பயங்கரத் தாக்குதல் இடம்பெறவில்லையெனவும் அவர் சகோதர நாளிதழொன்றுக்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.