கனேடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடேவ், தனது பாடசாலை நண்பருடன் குத்துச்சண்டையில் ஈடுபடுவதற்கு அழைப்பொன்றை சமூகவலைத்தளத்தினுடாக விடுத்துள்ளார்.
கனடாவின் பிரபல திரை நடிகரான மெத்தியூ பெர்ரி, தனது பாடசாலை காலத்தில் தன்னை விட வயதில் குறைந்த ஜஸ்டின் டுரூடேவ் மீது கொண்ட பொறாமை காரணமாக அவரை தாக்கியுள்ளதாக தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு செவ்வி அளித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் கருத்திற்கு தனது டுவிட்டர் பதிவின் மூலம் பதில் அளித்திருந்த ஜஸ்டின் டுரூடேவ், 35 வருடங்ககளுக்கு முதல் நடந்த சம்பவத்திற்கு பதில் அளிப்பதற்கு தன்னுடன் குத்து சண்டையில் பங்குபற்றும்படி மெத்தியூ பெர்ரிக்கு அழைப்பொன்றை வேடிக்கையான முறையில் விடுத்துள்ளார்.
குறித்த பதிவிற்கு மறுபதில் அளித்துள்ள மெத்தியூ பெர்ரி, கனடாவின் பிரதமரான ஜஸ்டின் டுரூடேவிடம், நாட்டின் இராணுவ கட்டுப்பாடுகள் இருப்பதை கருத்திற்கொண்டு, தான் அவரது அழைப்பிற்கு ஒத்துழைப்பதாக நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
மேலும் பகுதிநேர குத்துசண்டை பயிற்சியை மேற்கொண்டுவரும் கனேடிய பிரதமரின், குறித்த பதிவுகள் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Canadian Prime Minister Justin Trudeau spars in the ring at Gleason’s Boxing Gym in the Brooklyn borough of New York, U.S., April 21, 2016. REUTERS/Carlo Allegri