பாடசாலை ஆரம்ப முதல் நாளன்று பொலிசாரின் போக்குவரத்து பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள்.

பாடசாலை ஆரம்ப முதல் நாளன்று பொலிசாரின் போக்குவரத்து பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள்.

கனடா-பாடசாலை ஆரம்ப முதல் நாளான இன்று மாணவர்கள் வகுப்புகளிற்கு செல்கின்றனர்.இன்றய நாளில் போக்குவரத்து, பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ரொறொன்ரோ பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
“நீங்கள் பள்ளியில் கவனம் செலுத்துகின்றீர்களா” எனப்படும் இந் நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
இக்கால கட்டத்தில் பொலிசார் மற்றும் வாகன தரிப்பிட அமுலாக்க அதிகாரிகள் வாகனதாரிகள், சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் பாடசாலை மண்டலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா என்பது குறித்து கண்காணிப்பர்.
இவை மட்டுமன்றி ஆபத்தான வாகனம் செலுத்தும் குற்றங்கள், தடைசெய்யப்பட்ட திருப்பங்கள் மற்றும் கவனம் திசை திருப்பிய டிரைவிங் போன்ற  செயற்பாடுகளையும் கண்காணிப்பர். பாடசாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட கூடாது என்ற குறியிடப்பட்ட மண்டலங்களையும் கண்காணிபர் என தெரிவித்துள்ளனர்.
வேகம் மிக பெரிய பிரச்சனையாக இருக்கின்றதெனவும் கூறப்படுகின்றது. வேக அமுலாக்கலும் நடைமுறை படுத்தப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இக்கண்காணிப்பு நிகழ்வு அதிகார பூர்வமாக இன்று காலை 7மணிக்கு எற்றோபிக்கோவில் அமைந்துள்ள இரண்டாம் வீதி இளநிலை நடுத்தர பள்ளியில் ஆரம்பமாகின்றது.
schsch1sch2sch3

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News