இலங்கை போன்ற ஒரு தருணம் பாக்கிஸ்தானில் ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்று பாக்கிஸ்தானில் ஹக்கீகி ஆசாதிக்காக மக்களை வீதிகளை நிரப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ள அவர் அசீவ்ஜர்தாரி ஷெரீப் குடும்ப மாபியா மூன்று மாதத்தில் நாட்டை அரசியல் பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கிஸ்தானை சூறையாடி 30 வருடகாலமாக குவித்த சொத்துக்களை அவர்கள் சேமித்துள்ளனர்,அரச நிறுவனங்கள் எவ்வளவு காலம் இதனை அனுமதிக்கும் என்பதே எனது கேள்வி என இம்ரான்கன் கேள்வி எழுப்பியுள்ளார்.