சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கான நடவடிக்கைகளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களும் தொடங்கினர்.
இந்நிலையில் பறிமுதல் செய்த பின்னர் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வருவாய்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் ஆறு கலெக்டர்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்துகள் குறித்து ஆய்வு செய்வார்கள்.
பின்னர் அந்த சொத்துகள் சட்டப்படி கையகப்படுத்தப்படும், இதனை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.
அரசு உத்தரவுப்படி சொத்துகளை பராமரிப்பார்கள், அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில் அரசே உபயோகிக்கும் அல்லது கலெக்டர்/நீதிபதி முன்னிலையில் ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளார்.