காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவின் தீர்மானத்தினால் தாம் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளதாக கனேடிய அதரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த கனேடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கத்தரீன் மக்கென்னா, ‘ அமெரிக்காவின் நிலை குறித்து கனடா மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது.
பரிஸ் உடன்படிக்கை கனடாவுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கே சிறந்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை மூலம் சிறந்த வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
சுத்தமான வளர்ச்சிப் பொருளாதாரத்தில் கனடா ஒரு பகுதியாக இருக்கும். பரிஸ் உடன்படிக்கையை முன்னெடுப்பது குறித்து சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் கலந்துரையாடவுள்ளோம். இதனை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.