பயணத்தடையை தொடர்ந்து குடியுரிமை தடையை ஏற்படுத்தவுள்ள டிரம்ப்..!

பயணத்தடையை தொடர்ந்து குடியுரிமை தடையை ஏற்படுத்தவுள்ள டிரம்ப்..!

அமெரிக்க பயணத்தடை உத்தரவை தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவில் குடியுரிமை வழங்கல் மற்றும் கிரீன் கார்ட் திட்டங்களில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதற்கு பிறகு வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக, வெளிநாட்டவர்களை 50 சதவிகிதத்தால் குறைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் தங்கி பணிபுரிவதற்காக சுமார் 10 இலட்சம் பேருக்கு கிரீன் கார்டும், 5 இலட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த திட்டங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு டிரம்ப் தீர்மானித்துள்ளதாகவும், குறித்த திட்டத்திற்காக, புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சட்டவாக்கத்தின் முன் வரைபை இரண்டு செனட் சபை உறுப்பினர்கள், அவைக்கு கையளித்துள்ளதோடு குறித்த சட்டவாக்கம் அமுலுக்கு வரும் பட்சத்தில், அமெரிக்காவிற்குள் குடியேறும் வெளிநாட்டவர்கள் 50 சதவிகிததால் குறைக்கப்படும்சூழல் உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்மில் குறித்த திட்டத்தினால் அதிகளவான இந்தியர்கள் பாதிப்படைய கூடிய சூழல் உருவாகுமென குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

green-cardUS_Trump_Britain_Mukhuscis

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *