கிங்ஸ்ரன், ஒன்ராறியோ–கனடாவின் பிசியான நெடுஞ்சாலை ஒன்றில் நீடித்த ஒன்று சேர்ந்த ஏழு வாகனங்கள் மோதிய பயங்கரமான விபத்து ஒன்றில் நான்கு பேர்கள் இறந்ததுடன் மற்றும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வியாழக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலை 401 கிங்ஸ்ரன், ஒன்ராறியோவிற்கு அருகாமையில் இடம்பெற்றதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் அஞ்சி அற்கின்சன் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நால்வரின் உயிரை பலிகொண்ட விபத்திற்கான காரணம் என்ன என்பதை விசாரனையாளர்கள் இன்னமும் தீர்மானிக்க வில்லை என கூறப்பட்டுள்ளது.
மரணமடைந்துள்ள நால்வரும் குவியலாக இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட வாகனம் ஒன்றில் பயணம் செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். இவர்களின் வயது, இனம், உறவு முறை போன்ற விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் வாகனம்-விபத்தின் போது தீப்பிடித்ததென பொலிசார் தெரவிக்கும்- மோதலில் அகப்பட்ட இரு கார்களில் ஒன்றென தெரிவித்தனர்.
இந்த மோதலில் வணிக வாகனம் ஒன்றும் நான்கு போக்குவரத்து டிரக்குகளும் சம்பந்தப்பட்டுள்ளதென அட்கின்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மோதலில் அடையாளம் தெரியாத இரு மனிதர்கள் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆண் ஒருவர் வணிக வாகனத்திலிருந்து மீட்டு எடுக்கப்பட்டார்.இவரது காயங்கள் மோசனமாவை. காயமடைந்த மற்றவரின் நிலைமையும் மோசமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியான நெடுஞ்சாலை 401-ஐ சூழ்ந்த ஜோய்ஸ்வில் வீதி மேற்கு விசாரனைக்காக மூடப்பட்டது. இதன் காரணமாக போக்கு வரத்துக்கள் தாமதமடைந்தன.
மேலதிக விபரங்கள் தெரிய வந்ததும் வெளியிடப்படுமென பொலிசார் தெரிpவித்துள்ளனர்.