ஒட்டாவா-பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று நேட்டோ தலைவர்களின் உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ள பிரசஸல்ஸ் பயணமாகின்றார். யு.எஸ் அதிபராக டொனால்ட் டிரம் வெள்ளை மாளிகை சென்ற பின் இடம்பெறும் கூட்டணியின் முதல் கூட்டம் இதுவாகும்.
இராணுவ கூட்டணிகளின் எதிர்காலம் கால நிலை மாற்றத்திற்கெதிரான போராட்டம் மற்றும் சுதந்திர வர்த்தகம் கூட நிகழ்ச்சி நிரலில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்பும் தனது நேட்டோ மற்றும் ஜி7 சகவாதிகளுடன் கலந்து கொள்வார்.
ஆனால் இம்மகாநாட்டில் மன்செஸ்டர் இசை நிகழ்வில் 22-மக்கள் கொல்லப்பட்டதுடன் 56பேர்கள் வரை படுகாயமடைந்ததற்கான தற்கொலை குண்டு தாக்குதல் குறித்த பயங்கரவாத நிகழ்வு தனிக்கவனமாக இடம்பெறும் என அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மகாநாட்டை தொடர்ந்து ட்ரூடோ ட்ரோமினா, இத்தாலி சென்று இவ்வருடத்தின் ஜி7 ஒன்றுகூடலில் கலந்து கொள்வார். பயணத்தின் போது ரோம் சென்று இத்தாலி பிரதம மந்திரி பவாலோ ஜென்ரிலோனி மற்றும் பாப்பாண்டவரையும் சந்திக்க உள்ளார்.