Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பன்னீர் செல்வம் உயிருக்கு ஆபத்து!

March 22, 2017
in News
0
பன்னீர் செல்வம் உயிருக்கு ஆபத்து!

பன்னீர் செல்வம் உயிருக்கு ஆபத்து!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மத்திய படை பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஓபிஎஸ் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக தலைமையகத்தில் நுழைந்தால் ஓபிஎஸ்-க்கு கை இருக்காது என பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்தார் சசிகலா அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன்.

இதன் பின்னர் தேனி அருகே ஓபிஎஸ் வாகனம் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் 11 எம்.எபிக்கள் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசியுள்ளனர்.

அதில் மைத்ரேயன் தலைமையில் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் மதுசூதனன் உயிருக்கு ஆபத்து இருப்பதை விவரித்தனர்.

மேலும் இருவருக்கும் மத்திய படை பாதுகாப்பு தர வேண்டும் என்றும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இன்றைய சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவு மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை.

அவர் உடல்நலக் குறைவால் வரவில்லை என மைத்ரேயன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற கோரிக்கையுடன் ஓபிஎஸ் தரப்பு எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Featured
Previous Post

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீளவில்லை

Next Post

12 நாடுகளின் விமான பயணிகளுக்கு அதிரடி தடை விதித்த அமெரிக்க: இந்த முறை என்ன தெரியுமா?

Next Post
12 நாடுகளின் விமான பயணிகளுக்கு அதிரடி தடை விதித்த அமெரிக்க: இந்த முறை என்ன தெரியுமா?

12 நாடுகளின் விமான பயணிகளுக்கு அதிரடி தடை விதித்த அமெரிக்க: இந்த முறை என்ன தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures